ஹாங்சோவில் நடந்த ஆண்களுக்கான 1500மீ T11 பிரிவில் இந்தியாவின் அங்கூர் தாமா 4:27:70 வினாடிகளில் கடந்து தங்கம் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக 5000 மீ T11 தங்கம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங்சோவில் 4ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 28ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என்று மொத்தமாக 303 பேர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது நடந்து வரும் போட்டிகளில் கேனோ, பிளைண்ட் ஃபுட்பால், லான் பவுல்ஸ், ரோயிங் மற்றும் டேக்வாண்டோ ஆகிய ஐந்து விளையாட்டுகள் உட்பட 17 பிரிவுகளில் இந்தியா முதல் முறையாக பங்கேற்கிறது.
மூன்றாம் நாளான இன்று காலை முதலே இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று பதக்கங்களை குவித்து வருகிறது. நேற்று வரையில் இந்தியா 10 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என்று மொத்தமாக 35 பதக்கங்களை கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில் தான் இன்று காலை முதல் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. இதில், ஈட்டி எறிதல, F64 பிரிவில் இந்தியாவின் சுமித் அண்டில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். மூன்று சுற்றுகளில் அவர் கடைசியாக எறிந்த 73.29 மீ தூரம் பாரா விளையாட்டில் புதிய உலக சாதனையாக அமைந்துள்ளது. இதன் மூலமாக அவர் தங்கம் வென்றார்.
Australia vs Netherlands: மார்கஸ் ஸ்டோய்னிஸ் விலகல் – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்!
இதே போன்று ஈட்டி எறிதலில் இந்தியாவின் புஷ்பேந்திரா சிங் 62.06 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் ஈட்டி எறிதல் F37/38 பிரிவு இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் ஹானி 55.97 மீ தூரம் எறிந்து உலகக் சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான வட்டு எறிதல் F54/F55 பிரிவில் இந்தியாவின் சாக்ஷி கசானா 22.06 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் சிங்கிள்ஸ் கிளாஸ் – 4ல் இந்தியாவின் பவீனா படேல் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 200 மீ T37 பிரிவில் இந்தியாவின் ஷ்ரேயன்ஷ் திரிவேதி பந்தய தூரத்தை 25.26 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் கைப்பறினார். மற்றொரு போட்டியில் 200 மீ T35 பிரிவில் இந்தியாவின் நாராயண் தாக்கூர் பந்தய தூரத்தை 29.83 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் கைப்பறினார். பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் இந்தியாவின் மணீஷா ராமதாஸ் மற்றும் பிரமோத் பகத் ஜோடி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
CWC 2023: ஒரு நாள் விடுமுறை - தரம்சாலாவில் சுற்றுலா சென்ற இந்தியா டீம்!
இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த ஆண்களுக்கான 1500மீ T11 பிரிவில் இந்தியாவின் அங்கூர் தாமா 4:27:70 வினாடிகளில் கடந்து தங்கம் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக நேற்று நடந்த 5000 மீ T11 தங்கம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
