SA vs BAN: அரையிறுதி வாய்ப்பு அவ்வளவு தான் – 5ஆவது இடம் பிடிக்க கடைசி வரை போராடுவோம் – ஷாகிப் அல் ஹசன்!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணியானது 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலமாக அரையிறுதி வாய்ப்பு கனவாக மாறிவிட்டது என்று ஷாகிப் அல் ஹசன் கூறியுள்ளார்.

Bangladesh Captain Shakib Al Hasan gives explanation about loss against South Africa in World Cup Cricket at Mumbai rsk

தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 23ஆவது லீக் போட்டி நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 382 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் குயீண்டன் டி காக் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அவர் 140 பந்துகளில் 15 பவுண்டரி 7 சிக்ஸர்கள் உள்பட 174 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் மார்க்ரம் 60, ஹென்ரிச் கிளாசென் 90, டேவிட் மில்லர் 30* ரன்கள் சேர்க்க தென் ஆப்பிரிக்கா 382 ரன்கள் குவித்தது.

Asian Para Games: ஈட்டி எறிதலில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற சுந்தர் சிங், ரிங்கு ஹூடா, அஜீத் சிங் யாதவ்!

பின்னர் கடின இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கூட 1 ரன்களில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 21.6 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு வந்த முகமதுல்லாஹ் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அவர், 111 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 111 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, வங்கதேச அணி 46.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்து 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Hangzhou Asian Para Games: 1500 மீ T11 பிரிவில் இந்தியாவின் அங்கூர் தாமா தங்கம் வென்று சாதனை!

இதன் மூலமாக விளையாடிய 5 போட்டிகளில் 4ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது. தோல்விக்குப் பிறகு பேசிய வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கூறியிருப்பதாவது: இந்தப் போட்டியில் கடைசி 10 ஓவர்களில் ஹென்ரிச் கிளாசென் விளையாடிய விதத்தைப் பார்த்த போது அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. வங்கதேச அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது தற்போது கடினமாகியுள்ளது.

Australia vs Netherlands: மார்கஸ் ஸ்டோய்னிஸ் விலகல் – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்!

முதல் 25 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய எங்களால் அதன் பிறகு சிறப்பாக பந்து வீச முடியாமல் போய்விட்டது. அதற்கு காரணம் குயீண்டன் டி காக்கின் அதிரடி பேட்டிங். அவரைத் தொடர்ந்து ஹென்ரிச் கிளாசென் வேறு விதமாக பேட்டிங் செய்து போட்டியை அவர்களது பக்கம் கொண்டு சென்றனர். இது போன்ற மைதானங்களில் இப்படி பேட்டிங் செய்ய முடியும் என்றாலும், நாங்கள் சிறப்பாக பந்து வீச முடியாமல் போய்விட்டது. கடைசி 10 ஓவர்களில் தான் நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம்.

Hardik Pandya: கணுக்கால் காயம், இங்கிலாந்து, இலங்கை போட்டியிலும் ஹர்திக் பாண்டியா இடம்பெற வாய்ப்பில்லை!

முகமதுல்லாஹ் விளையாடியது போன்று மற்ற வீரர்கள் யாரும் விளையாடவில்லை. இந்த உலகக் கோப்பையில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். எங்களது அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறாவிட்டாலும் 5ஆவது இடம் பிடிக்க கடைசி வரை சிறப்பாக செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

CWC 2023: ஒரு நாள் விடுமுறை - தரம்சாலாவில் சுற்றுலா சென்ற இந்தியா டீம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios