England vs Afghanistan: வெற்றிக்காக போராடும் ஆப்கானிஸ்தான் – டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.
டெல்லியில் நடக்கும் உலகக் கோப்பையின் 13ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பீல்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி, முதலில் ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்கிறது. ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முகமது நஜீப்பிற்குப் பதிலாக இக்ரம் அலிகில் அணியில் இடம் பெற்றுள்ளார்.
IND vs PAK: நட்புனா என்னானு தெரியுமா? பாபர் அசாமிற்கு தனது ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி!
இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும், இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்த உலகக் கோப்பை தொட்ரில் இதுவரையில் நடந்த 2 போட்டிகளில் ஒரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று ஆப்கானிஸ்தான் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.
இங்கிலாந்து:
டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோட், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹாரி ப்ரூக் லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், மார்க் வுட், ரீஸ் டாப்ளே
ஆப்கானிஸ்தான்:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி (கேப்டன்), அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, இக்ரம் அலிகில், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபாரூக்கி, ரஷீத் கான்.
உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் தான் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஒரு அணி விளையாடும் 9 போட்டிகளில் குறைந்தது 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஒரே அணி சம புள்ளிகள் பெற்றிருந்தால் ரன் ரேட் அடிப்படையில் அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இதுவரையில் இரு அணிகளும் மோதிய 2 ஒரு நாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தான் வெற்றி பெற்றுள்ளது. தற்போது முதல் முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன. அருண் ஜெட்லி மைதானத்தில் இதுவரையில் 30 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன.
இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 14 முறை வெற்றி பெற்றுள்ளது. பின்னர், சேஸ் செய்த அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 231 ஆகும். ஆவரேஜ் 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் 209 ஆகும். இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் 428/5, 50 ஓவர்கள்.
குறைந்தபட்ச ஸ்கோர் 99/10, (27.1 ஓவர்). சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 281/4, (40.5 ஓவர்கள்). இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 13ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
ரசிகையை ஆரத் தழுவிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு 99 கசையடிகள் தண்டனையா?
- CWC 2023
- ENG vs AFG live
- ENG vs AFG live match world cup
- ENG vs AFG live streaming
- England vs Afghanistan World Cup 13th Match
- England vs Afghanistan cricket world cup
- England vs Afghanistan live
- England vs Afghanistan world cup 2023
- Golden Ticket
- Hashmatullah Shahidi
- ICC Cricket World Cup 2023 schedule
- ICC World Cup 2023
- ICC cricket world cup 2023
- Jos Buttler
- World Cup 2023 fixtures
- World cup cricket live scores
- cricket world cup 2023 news
- cricket world cup tickets
- watch ENG vs AFG live
- world cup ENG vs AFG venue