பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக “ஜெய்ஸ்ரீராம்” முழக்கம்.!ஏற்றுக்கொள்ள முடியாதது- உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் சென்ற போது ஜெய் ஶ்ரீ ராம் என ரசிகர்கள் முழக்கமிட்டதற்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாக். போட்டி
உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரண்டு லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அடுத்த வெற்றியை பதிவு செய்யும் வகையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை உலகமே ஆவலோடு எதிர்பார்த்தனர்.
அந்த அளவிற்கு இரு தரப்பும் மோதல் கடுமையாக இருக்கும் என ரசிகர்கள் காத்து இருந்தனர். உலகிலேயே மிகப்பெரிய மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்தில் குவிந்து இருந்தனர். முதலில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சிறப்பாக ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்மிழந்தனர்.
ஜெய் ஶ்ரீராம் முழக்கம்
இதன் காரணமாக 192 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருண்டது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. கேப்டன் ரோகித் சர்மா தனது அதிரடியால் பாகிஸ்தான் பவுவர்களை அலறவிட்டார். இறுதியாக இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தோல்வி அடைந்தது. இந்தநிலையில் இந்த போட்டியின் போது பல நேரங்களில் ரசிகர்களால் “ ஜெய்ஸ்ரீராம்” என முழக்கம் எழுப்பப்பட்டது. மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னனி வீரர் ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது “ ஜெய்ஸ்ரீராம்” என முழுக்கம் எழுப்பப்பட்டது. இதனை பலரும் விமர்சனர் செய்துள்ளனர். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்து இருந்தனர். சமூக வலை தளத்தில் இது தொடர்பாக வீடியோ வேகமாக பரவி வருகிறது.
கண்டனம் தெரிவித்த உதயநிதி
இந்தநிலையில் இது தொடர்பாக வீடியோவை பதிவு செய்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதை ஏற்க முடியாது. விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.
விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். விளையாட்டை வெறுப்பை பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.