ரசிகையை ஆரத் தழுவிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு 99 கசையடிகள் தண்டனையா?

தனது மனைவி அல்லாத பெண்ணை எந்த ஆணும் தொடக்கூடாது என்று ஈரான் விதிகள் இருக்கும் நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓவியரான ஃபதேமா ஹமாமியை கட்டிப்பிடித்த சைகை ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Portuguese footballer Cristiano Ronaldo sentenced to 99 lashes for hugged Iran Painter Fatemah Hamami? rsk

ஈரான் நாட்டில் தன் மனைவி அல்லாத பெண்ணை எந்த ஆணும் தொடக் கூடாது என்று விதி இருக்கும் நிலையில், பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஈரான் நாட்டைச் சேர்ந்த ஓவியரான ஃபதேமா ஹமாமியை ஆரத்தழுவி சர்ச்சைக்குள்ளானார்.

IND vs PAK: திரும்ப வந்த அகமதாபாத் ராஜா சுப்மன் கில் – இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு!

ஹமாமியை கட்டிப்பிடித்ததற்காக ரொனால்டோ மீது ஈரானிய வழக்கறிகர்கள் கிரிமினல் புகார் அளித்துள்ளதாகவும், போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ அவரது நடத்தைக்காக 99 கசையடிகள் விதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான ஈரான் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து அதில் கூறியிருப்பதாவது: ஹமாமியை கட்டி தழுவியதற்காக ரொனால்டோவுக்கு 99 கசையடிகள் விதிக்கப்படவில்லை. மேலும், அவர் கால்பந்து வீரரின் தீவிரமான ரசிகை. ஆதலால், ரொனால்டோ, ஹமாமியை சந்தித்தது நாட்டிலுள்ள அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

IND vs PAK: இசை நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபர்பபு இல்லை, ரசிகர்களுக்காக மட்டுமே நடக்கும் இசை நிகழ்ச்சி!

ஈரானில் எந்தவொரு சர்வதேச விளையாட்டு வீரருக்கும் எதிராக எந்த தண்டனையும் வழங்கப்படுவதை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். கடந்த செப்டம்பர் மாதம் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் கால்பந்து போட்டிகளில் விளையாடுவதற்காக ரொனால்டோ ஈரானுக்கு பயணம் செய்தார்.

 

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், ஹமாமி, ரொனால்டோவிற்கு அவரது புகைப்பட ஓவியத்தை பரிசாக அளித்தார். ஃபாதேமா ஹமாமி உடனான அவரது நேர்மையான மற்றும் மனிதாபிமான சந்திப்பு மக்கள் மற்றும் நாட்டின் விளையாட்டு அதிகாரிகளால் பாராட்டப்பட்டது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் அல் நாசர் அணியானது பெர்செபோலிஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

IND vs PAK: இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios