பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.
அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பையின் 12 ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடந்த 2 போட்டிகளில் சுப்மன் கில் இடம் பெறவில்லை. இந்த நிலையில், தான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இடம் பெற்றுள்ளார்.

மேலும், சுப்மன் கில் இடம் பெற்ற நிலையில், அவருக்குப் பதிலாக இடம் பெற்றிருந்த இஷான் கிஷானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷர்துல் தாக்கூரும் இடம் பெற்றுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்தப் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இதுவரையில் இரு அணிகளும் உலகக் கோப்பையில் நேருக்கு நேர் 7 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 7 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், இரு அணிகளும் விளையாடிய 134 போட்டிகளில் இந்தியா 56 போட்டிகளிலும், பாகிஸ்தான் 73 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்
பாகிஸ்தான்:
அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் சகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷகீன் அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப்

இந்தியாவில் நடந்த 30 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 11 போட்டியிலும், பாகிஸ்தான் 19 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில்தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்தப் போட்டிக்காக அகமதாபாத் மைதானமே ரசிகர்களின் வருகையால் திருவிழா போன்று காட்சியளிக்கிறது.

