IND vs PAK: இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியின் மூலமாக இரு அணிகளும் 8ஆவது முறையாக பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் டெங்கு பாதிப்பால் இடம் பெறாத சுப்மன் கில் இந்தப் போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுப்மன் கில் இன்றைய போட்டியில் இடம் பெற்றால் இஷான் கிஷான் நீக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
8ஆவது முறையாக சாதிக்குமா இந்தியா? என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?
மேலும், ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு மீண்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறவும் வாய்ப்பிருக்கிறது. இதுவரையில் சூர்யகுமார் யாதவ் உலகக் கோப்பையில் போட்டியில் விளையாடாத நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ்விற்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில், இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: குஜராத்தின் வடக்கு மாவட்டங்களிலும், அகமதாபாத்திலும் அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
2023ல் உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக குறைவான ரன்னுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா!
மேலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த நாள், அகமதாபாத் மற்றும் பிற வட மாவட்டங்களான பனஸ்கந்தா, சபர்கந்தா மற்றும் அர்வல்லி போன்ற பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்” என்று அகமதாபாத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய இயக்குனர் மனோரமா மொஹந்தி தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக கடந்த மே மாதம் 28 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால், இந்தப் போட்டியானது மழையின் காரணமாக ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாளுக்கு மாற்றப்பட்டது. அதன்படி 29 ஆம் தேதி நடந்த போட்டியின் போதும் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
New Zealand vs Bangladesh: திரும்ப வந்த கேன் வில்லியம்சன் – டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு!
இந்தியா பிளேயிங் 11:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் அல்லது இஷான் கிஷான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான் பிளேயிங் 11:
அப்துல்லா ஷாபீக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் சகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாகீன் அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப்.
இதுவரையில் ஒரு நாள் உலகக் கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேர் 7 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்தியா தான் 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியின் மூலமாக உலகக் கோப்பையில் 8ஆவது போட்டியில் மோதுகின்றன. இதே போன்று இரு அணிகளும் 134 ஒரு நாள் ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் 73 போட்டியிலும், இந்தியா 56 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டிகளுக்கு முடிவு எட்டவில்லை.
India vs Pakistan உலகக் கோப்பை போட்டிக்காக அகமதாபாத்தில் 11000க்கும் அதிகமான போலீசார் குவிப்பு!
இரு அணிகளும் இந்தியாவில் 30 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், பாகிஸ்தான் 19 போட்டியிலும், இந்தியா 11 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் இந்தியா 4ல் வெற்றி பெற்றிருக்கிறது. இதில், ஒரு போட்டிக்கு முடிவு எட்டவில்லை.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 131 ரன்கள் குவித்துள்ளார். விராட் கோலி 2 போட்டிளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார். ஜஸ்ப்ரித் பும்ரா 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். மேலும், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கின்றனர்.
இதே போன்று பாகிஸ்தான் அணியும் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில், கடைசியாக விளையாடிய இலங்கைக்கு எதிரான போட்டியில் 344 ரன்களை சேஸ் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது.
- Babar Azam
- CWC 2023
- Cricket World Cup 2023
- Golden Ticket
- ICC Cricket World Cup 2023
- ICC Cricket World Cup 2023 schedule
- ICC World Cup 2023 Glittering Ceremony
- ICC cricket world cup 2023
- IND vs PAK live
- IND vs PAK live match world cup
- IND vs PAK live streaming
- India vs Pakistan cricket world cup
- India vs Pakistan live
- India vs Pakistan world cup 2023
- Indian Meteorological Department
- New Zealand vs Bangladesh World Cup 11th Match
- Rohit Sharma
- Shubman Gill
- World Cup 2023 fixtures
- World cup cricket live scores
- cricket world cup 2023 news
- cricket world cup tickets
- watch IND vs PAK live
- world cup IND vs PAK venue