New Zealand vs Bangladesh: திரும்ப வந்த கேன் வில்லியம்சன் – டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு!
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் காயம் காரணமாக இடம் பெறாத கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளார்.
நியூசிலாந்து:
டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மார்க் சேப்மேன், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், மேட் ஹென்றி, லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்
வங்கதேசம்:
தன்ஷித் அகமது, லிட்டன் தாஸ், நஜ்முல்லா ஹூசைன் ஷாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), மெஹிடி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தவ்ஹீத் ஹ்ரிதோய், மஹ்முதுல்லா ரியாத், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஷ்தாஃபிஜூர் ரஹ்மான்.
மேலும், வில் யங் நீக்கப்பட்டுள்ளார். இதே போன்று வங்கதேச அணியிலும் மஹெதி ஹசன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மஹ்முதுல்லா ரியாத் அணியில் இடம் பெற்றுள்ளர். விளையாடிய 2 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று வங்கதேச அணி விளையாடிய 2 போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதுவரையில் உலகக் கோப்பையில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் 5 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 5 போட்டியிலும் நியூசிலாந்து தான் வெற்றி பெற்றிருக்கிறது. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலக் கோப்பையில் நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2023ல் உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக குறைவான ரன்னுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா!
ஆனால், இதுவே ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் 41 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 30 போட்டிகளில் நியூசிலாந்தும், 10 போட்டிகளில் வங்கதேச அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. ஆகையால், இன்று சென்னையில் நடக்கும் போட்டியிலும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- CWC 2023
- Golden Ticket
- ICC Cricket World Cup 2023 schedule
- ICC World Cup 2023 Glittering Ceremony
- ICC cricket world cup 2023
- Kane Williamson
- Mahmudullah
- NZ vs BAN live
- NZ vs BAN live match world cup
- NZ vs BAN live streaming
- New Zealand vs Bangladesh World Cup 11th Match
- New Zealand vs Bangladesh cricket world cup
- New Zealand vs Bangladesh live
- New Zealand vs Bangladesh world cup 2023
- Rachin Ravindra
- Shakib Al Hasan
- World Cup 2023 fixtures
- World cup cricket live scores
- cricket world cup 2023 news
- cricket world cup tickets
- watch NZ vs BAN live
- world cup NZ vs BAN venue