IND vs PAK: 0.9 கிராம் தங்கத்துடன் கூடிய உலகக் கோப்பையை ரோகித் சர்மாவுக்கு பரிசாக கொடுக்கும் நகைக்கடைக்காரர்!

அகமதாபாத்தில் உள்ள நகைக்கடைக்காரர் ஒருவர் 0.900 கிராம் எடையுள்ள தங்கத்துடன் கூடிய உலகக் கோப்பையை உருவாக்கி, அதனை இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பரிசளிக்க விரும்புகிறார்.

Ahmedabad jeweller Rauf Sheikh wants to present 0.9 gram weighing Worlds smallest gold World Cup trophy to indian captain Rohit Sharma during IND vs PAK Match rsk

இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இலங்கை, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. எஞ்சிய 7 போட்டிகளிலும் இந்த அணிகள் கண்டிப்பாக 7 போட்டியிலும் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு அமையும்.

India vs Pakistan: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இன்னிங்ஸ் பிரேக்கில் 10 நிமிட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு!

Ahmedabad jeweller Rauf Sheikh wants to present 0.9 gram weighing Worlds smallest gold World Cup trophy to indian captain Rohit Sharma during IND vs PAK Match rsk

நேற்று நடந்த ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 10 ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 11ஆவது லீக் போட்டி நடக்கிறது. ஏற்கனவே நியூசிலாந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. வங்கதேச அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

அடி மேல் அடி வாங்கும் ஆஸ்திரேலியா: WCயில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி – ஆஸி அரையிறுதிக்கு செல்லுமா?

இதையடுத்து இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிக முக்கியமான போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது. இதில், போட்டிக்கு முன்னதாக 12.30 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. மேலும், போட்டியில் இன்னிங்ஸ் பிரேக்கின் போது 10 நிமிடமும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி.. மெட்ரோ ரயில் அறிவித்த சூப்பர் ஆஃபர்..!

Ahmedabad jeweller Rauf Sheikh wants to present 0.9 gram weighing Worlds smallest gold World Cup trophy to indian captain Rohit Sharma during IND vs PAK Match rsk

அதோடு கோல்டன் டிக்கெட் பெற்ற அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த நிலையில் தான் அகமதாபாத்தைச் சேர்ந்த நகைக்கடை விற்பனையாளர் ரவூப் ஷேக், வெறும் 0.9 கிராம் எடையுள்ள உலகின் மிகச் சிறிய தங்க உலகக் கோப்பை கோப்பையை வடிவமைத்துள்ளார். மூன்றாவது முறையாக, அகமதாபாத்தில் உள்ள நகைக்கடைக்காரர் ஒருவர் தங்க உலகக் கோப்பை கோப்பையை வடிவமைத்துள்ளார். இந்த உலகக் கோப்பையின் எடை 0.9 கிராம் மற்றும் ஒன்றரை சென்டிமீட்டர் உயரம் கொண்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அகமதாபாத்தின் ஜமால்பூரைச் சேர்ந்த ரவூப் ஷேக், தொடர்ந்து மூன்றாவது உலகக் கோப்பைக்காக இந்த தனித்துவமான கோப்பையை உருவாக்கியுள்ளார். கோப்பை 22 காரட் தங்கத்தால் ஆனது என்று அவர் கூறுகிறார். அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் முறையாக அத்தகைய கோப்பையை வடிவமைத்தார். அறிக்கைகளின்படி, அந்த கோப்பைக்காக அவர் 1.2 கிராம் தங்கத்தை பயன்படுத்தினார். 2019 இல், ஷேக் 1 கிராம் எடையுள்ள உலகக் கோப்பை கோப்பையை உருவாக்கினார்.

2023ல் உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக குறைவான ரன்னுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா!

ஆனால், இந்த முறை 0.9 கிராம் எடை கொண்ட உலகக் கோப்பையை உருவாக்கியுள்ளார். தங்கம் மற்றும் வெள்ளியைப் பயன்படுத்தி மினியேச்சர் பொருட்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் கொண்ட ஷேக், இதுவரையில் வெள்ளி ரதங்கள், தங்க ராக்கிகள் மற்றும் தங்க கணபதி சிலைகள் என்று ஏராளமானவற்றை உருவாக்கியிருக்கிறார்.

Ahmedabad jeweller Rauf Sheikh wants to present 0.9 gram weighing Worlds smallest gold World Cup trophy to indian captain Rohit Sharma during IND vs PAK Match rsk

மிக இலகுவான தங்க உலகக் கோப்பை கோப்பையை உருவாக்கி அதை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதே ஷேக்கின் லட்சியம். 2019 ஆம் ஆண்டில், 1 கிராம் எடையுள்ள கோப்பையை வடிவமைத்து ஒரு சாதனையை அவர் கோட்டைவிட்டுள்ளார். இதனை மனதில் வைத்து தான் இந்த ஆண்டு 0.9 கிராம் எடையில் வடிவமைத்துள்ளார். கோப்பையை உருவாக்க சுமார் 2 மாதங்கள் எடுத்ததாக அவர் கூறுகிறார். அக்டோபர் 14ஆம் தேதி நாலை சனிக்கிழமையன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இந்தக் கோப்பையை வழங்க விரும்புவதாக ஷேக் கூறியுள்ளார்.

Ahmedabad jeweller Rauf Sheikh wants to present 0.9 gram weighing Worlds smallest gold World Cup trophy to indian captain Rohit Sharma during IND vs PAK Match rsk

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios