இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியானது நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ள நிலையில் 11,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில், இந்தியா விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று, பாகிஸ்தான் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. பலம் வாய்ந்த இரு அணிகளும் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக மோதவுள்ளன. இந்தப் போட்டியானது, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருக்கிறது.
உலகக் கோப்பையில் புற்றுநோயுடன் விளையாடியதாக சுப்மன் கில்லிடம் சொன்னேன் – யுவராஜ் சிங்!
இதற்காக இரு அணி வீரர்களும் அகமதாபாத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்தப் போட்டிக்கு முன்னதாக பிற்பகல் 12.30 மணிக்கு உலகக் கோப்பை இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதில், சங்கர் மகாதேவன், அரிஜித் சிங், நேஹா கக்கர், சுக்விந்தர் சிங் ஆகியோர் உள்ளிட்ட பலரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர். மேலும், போட்டியில் இன்னிங்ஸ் இடைவேளையின் போதும் 10 நிமிட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள இருக்கின்றனர். ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் டெங்கு காய்ச்சல் காரணமாக இடம் பெறாத சுப்மன் கில் நாளைய போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கிட்டத்தட்ட 1 மணி நேரமாக பேட்டிங் பயிற்சியும் செய்துள்ளார். இதுவரையில் ஒரு நாள் உலகக் கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேர் 7 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்தியா தான் 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
2023ல் உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக குறைவான ரன்னுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள்:
1992 - இந்தியா 216/7 (49) பாகிஸ்தான் – 173/10 (48.1) – சிட்னி
1996 – இந்தியா 287/8 (50) பாகிஸ்தான் - 248/9 (49) – பெங்களூரு
1999 – இந்தியா 227/6 (50) பாகிஸ்தான் – 180/10 (45.3) – மான்செஸ்டர்
2003 – பாகிஸ்தான் 273/7 (50) இந்தியா – 276/4 (45.4) – செஞ்சூரியன்
2011 – இந்தியா 260/9 (50) பாகிஸ்தான் – 231/10 (49.5) – மொகாலி
2015 – இந்தியா 300/7 (50) பாகிஸ்தான் – 224/10 (47) – அடிலெய்டு
2019 – இந்தியா 336/5 (50) பாகிஸ்தான் – 212/6 (40) – இங்கிலாந்து
இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 8ஆவது முறையாக உலகக் கோப்பையில் மோதவுள்ள. மிகவும் முக்கியமான போட்டி என்பதால், மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இருக்கைகளின் எண்ணிக்கை 1,32,000. இந்தப் போட்டிக்காக 1,32,000 இருக்கைகள் முழுவதும் நிரம்பியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
New Zealand vs Bangladesh: திரும்ப வந்த கேன் வில்லியம்சன் – டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிக்காக கிட்டத்தட்ட 11000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குஜராத் போலீசார், தேசிய பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர் உள்பட மொத்தம் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் மைதானம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


