பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பையின் 12ஆவது லீக் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனையை தக்க வைத்துக் கொண்டது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பையின் 12 ஆவது லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், கேப்டன் பாபர் அசாம் அதிகபட்சமாக 50 ரன்களும், முகமது ரிஸ்வான் 49 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 8ஆவது வெற்றி!#IndiaVsPakistan #WorldCup2023 pic.twitter.com/Bsa56RDGjG

Scroll to load tweet…

இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதன் மூலமாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஒவ்வொருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.

India vs Pakistan: ரசிகர்களோடு ரசிகராக இந்தியா பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்த அமித் ஷா!

பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கில் 4 பவுண்டரி அடித்து 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இது உலகக் கோப்பையில் அவர் அடித்த முதல் ஸ்கோர் ஆகும். அதன்பிறகு விராட் கோலி களமிறங்கினார்.

அவர், வந்த வேகத்தில் 3 பவுண்டரி அடித்த நிலையில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோகித் சர்மாவுடன், ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார். ஒரு கட்டத்தில் இந்தப் போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ரோகித் சர்மா, ஒரு நாள் கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

IND vs PAK: ஒரு நாள் போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்த ரோகித் சர்மா!

தொடர்ந்து விளையாடிய ரோகித் சர்மா உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது 4ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். மேலும், இது அவரது 53ஆவது ஒரு நாள் போட்டி அரைசதம் ஆகும். அதன் பிறகு அதனை அப்படியே சதமாக மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா, 63 பண்டுகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உள்பட 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

IND vs PAK, Hardik Pandya Manthiram: மந்திரம் போட்ட ஹர்திக் பாண்டியா – கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

அதன் பிறகு கேஎல் ராகுல் களமிறங்கினார். ரோகித் சர்மா இருக்கும் வரையில் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர் அவர் ஆட்டமிழந்ததும் நிதானமாக விளையாடத் தொடங்கினார். கடைசியாக ராகுல் 19 ரன்கள் எடுக்க, ஷ்ரேயாஸ் ஐயர் 4 பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்ததோடு, உலகக் கோப்பையில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இறுதியாக இந்திய அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்து பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8ஆவது முறையாக இந்தியா வெற்றி பெற்று சாதனை படைத்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 

Scroll to load tweet…