India vs Pakistan: ரசிகர்களோடு ரசிகராக இந்தியா பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்த அமித் ஷா!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை ரசிகர்களோடு ரசிகராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று பார்த்து ரசித்துள்ளார்.

Amit Shah Watching India vs Pakistan Cricket World Cup Match at Narendra Modi Stadium, ahmedabad rsk

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பையின் 12 ஆவது லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், கேப்டன் பாபர் அசாம் அதிகபட்சமாக 50 ரன்களும், முகமது ரிஸ்வான் 49 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

IND vs PAK: ஒரு நாள் போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்த ரோகித் சர்மா!

இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதன் மூலமாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஒவ்வொருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.

IND vs PAK: 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிராக 2ஆவது முறையாக இந்திய பவுலர்கள் சாதனை!

இதற்கு முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பவுலர்கள் ஒவ்வொருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்தப் போட்டி மொஹாலியில் நடந்தது. இதில், ஜாகீர் கான், ஆசிஷ் நெஹ்ரா, முனாப் படேல், ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதில் 5 பவுலர்கள் தான் பந்து வீசினார்கள்.

கடந்த 2011 ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதின. இதில், முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்கள் மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சிராஜ், பும்ரா, ஹர்திக், குல்தீப், ஜடேஜாவிடம் சிக்கி சின்னா பின்னமான பாகிஸ்தான் – 191க்கு ஆல் அவுட்!

பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கில் 4 பவுண்டரி அடித்து 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இது உலகக் கோப்பையில் அவர் அடித்த முதல் ஸ்கோர் ஆகும். அதன்பிறகு விராட் கோலி களமிறங்கினார். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார். ஒரு கட்டத்தில் இந்தப் போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ரோகித் சர்மா, ஒரு நாள் கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

IND vs PAK, Hardik Pandya Manthiram: மந்திரம் போட்ட ஹர்திக் பாண்டியா – கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

அதுமட்டுமின்றி சர்வதேச அளவில் 300 சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரிடி 398 போட்டிகளில் 369 இன்னிங்ஸ்களில் 351 சிக்ஸர்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெயில் 301 போட்டிகளில் 294 இன்னிங்ஸ்களில் 331 சிக்ஸர்கள் விளாசி 2ஆவது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 254 போட்டிகளில் 246 இன்னிங்ஸ்களில் 300 சிக்ஸர்கள் விளாசி 3ஆவது இடத்தில் உள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தற்போது வரையில் இந்திய அணி 24 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இந்த நிலையில், தான் இந்தப் போட்டியைப் பார்ப்பதற்கு நரேந்திர மோடி மைதானத்திற்கு தனது மனைவியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் வந்துள்ளார். அவர், ரசிகர்களோடு ரசிகராக அமர்ந்து இந்தப் போட்டியை கண்டு ரசித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios