IND vs PAK, Hardik Pandya Manthiram: மந்திரம் போட்ட ஹர்திக் பாண்டியா – கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

பந்தை வைத்து மந்திரம் போட்ட ஹர்திக் பாண்டியா அந்த பந்தில் இமாம் உல் ஹக்கின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

Hardik Pandya Manthiram to the ball and Next Imam Ul Haq was dismissed rsk

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மிகவும் முக்கியமான போட்டியான உலகக் கோப்பையின் 12ஆவது லீக் போட்டி தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். முதல் 2 போட்டிகளில் டெங்கு பாதிப்பால் இடம் பெறாத சுப்மன் கில் இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளார்.

ரசிகையை ஆரத் தழுவிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு 99 கசையடிகள் தண்டனையா?

பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதையடுத்து அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், முதல் ஓவரை வீசிய பும்ரா பந்தில் அப்துல்லா ஒரு பவுண்டரி அடித்தார். 2ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் இமாம் உல் ஹக் 3 பவுண்டரிகள் விளாசினார். இப்படியே தொடர்ந்து இருவரும் பவுண்டரியாக விளாசினர்.

IND vs PAK: இசை நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபர்பபு இல்லை, ரசிகர்களுக்காக மட்டுமே நடக்கும் இசை நிகழ்ச்சி!

அதன் பிறகு சிராஜ் வீசிய 8ஆவது ஓவரில் அப்துல்லா ஷபீக் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா பந்து வீச வந்தார். அவர் வீசிய முதல் ஓவரில் 7 ரன்களும், 2ஆவது ஓவரில் 11 ரன்களும் கொடுத்தார். அதன் பிறகு பாண்டியா தனது 3ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் இமாம் 2ஆவது பந்தில் பவுண்டரி அடித்தார். அதன் பிறகு 3ஆவது பந்தை வீசுவதற்கு முன்னதாக, பாண்டியா கையில் பந்தை வைத்துக் கொண்டு மந்திரம் போட்டுள்ளார். அதன் பிறகு தான் பந்தை வீசியுள்ளார்.

IND vs PAK: திரும்ப வந்த அகமதாபாத் ராஜா சுப்மன் கில் – இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு!

அந்த பந்தில் இமாம் உல் ஹக் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இமாம் உல் ஹக்கை பார்த்து பை – பை என்று சொல்லியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்று சிராஜ் வீசிய 28ஆவது ஓவரில் பாபர் அசாம் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹர்திக் பாண்டியா 4 ஸ்டெப் பின்புறம் சென்றதால், கேட்சை கோட்டைவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பந்து பவுண்டரியும் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios