PAK vs ENG: 2வது டெஸ்ட்டில் போராடி தோல்வி.. சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்தது பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து அணி.
 

england beat pakistan by 26 runs in second test and win series by 2 0

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி:

ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ஆலி ராபின்சன், ஜாக் லீச், மார்க் உட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

INDW vs AUSW: டையில் முடிந்த பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் ஸ்மிரிதி மந்தனாவின் அதிரடியால் இந்தியா வெற்றி

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், சௌத் ஷகீல், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஜாஹித் மஹ்மூத், முகமது லி, அப்ரார் அகமது.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டை போல அதிரடியாக பேட்டிங் ஆடி 51.4 ஓவரில் முதல் இன்னிங்ஸில் 281 ரன்களை அடித்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் 49 பந்தில் 63 ரன்களும், ஆலி போப் 61 பந்தில் 60 ரன்களும் அடித்தனர். ரூட்(8), ஹாரி ப்ரூக்(9) ஆகியோர் ஏமாற்றமளிக்க, ஸ்டோக்ஸ் 30 ரன்களும், வில் ஜாக்ஸ் 31 ரன்களும் அடிக்க, பின்வரிசையில் மார்க் உட் அதிரடியாக ஆடி 27 பந்தில் 36 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

பாகிஸ்தான் அணியில் இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அப்ரார் அகமது என்ற ரிஸ்ட் ஸ்பின்னர் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் (76) மற்றும் சௌத் ஷகீல் (63) ஆகிய இருவர் மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்

79 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 79 ரன்கள் அடித்தார். ஹாரி ப்ரூக் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். ப்ரூக் 108 ரன்களை குவித்தார்.  கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்கள் அடிக்க, 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 275 ரன்கள் அடித்தது. 

354 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 356 ரன்கள் என்ற சவாலான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. 356 ரன்கள்  என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் 45 ரன்களும், ரிஸ்வான் 30 ரன்களும் அடித்தனர். கேப்டன் பாபர் அசாம் ஒரு ரன்னில் ஆடமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் இமாம் உல் ஹக் மற்றும் சௌத் ஷகீல் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவரும் அரைசதம் அடித்தனர். 4வது விக்கெட்டுக்கு 88 ரன்களை சேர்த்தனர். இமாம் உல் ஹக் 60 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சௌத் ஷகீல் 53 ரன்களுடனும் அவருடன் ஃபஹீம் அஷ்ரஃப் (3) களத்தில் இருக்க, 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை பாகிஸ்தான் அடித்திருந்த நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்தது.

4ம் நாள் ஆட்டத்தில் ஃபஹீம் அஷ்ரஃப் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முகமது நவாஸ் பொறுப்புடன் ஆடி 45 ரன்கள் அடித்தார். ஆனால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறினார். அபாரமாக ஆடி சதத்தை நெருங்கியதுடன், பாகிஸ்தான் அணிக்கும் நம்பிக்கையளித்த சௌத் ஷகீல் 94 ரன்களுக்கு மார்க் உட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அகா சல்மான் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க, அப்ரார் அகமது(17), ஜாஹித் மஹ்மூத்(0), முகமது அலி(0) ஆகியோர் ஆட்டமிழக்க, 328 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 26 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. 

வெற்றிக்காக கடுமையாக போராடி முடியாமல் தோற்றது பாகிஸ்தான். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என தொடரை வென்றது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios