England vs Bangladesh: முதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து? வங்கதேச அணியுடன் பலப்பரீட்சை!

இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 7ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தரமசாலா மைதானத்தில் தொடங்குகிறது.

England and Bangladesh clash today at Dharamsalaa in 7th Match of Cricket World Cup 2023 rsk

கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணிகளுக்கும் முதல் போட்டிகள் முடிந்த நிலையில் 2ஆவது போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில், இன்று நடக்கும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி காலை 10.30 மணிக்கு தரமசாலா மைதானத்தில் தொடங்குகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இதே போன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.

Shubman Gill: சுப்மன் கில் சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதி – பாகிஸ்தான் போட்டியில் இடம் பெற வாய்ப்பில்லை!

இதுவரையில் இரு அணிகளும் 24 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இங்கிலாந்து 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச அணி 5 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் இங்கிலாந்து 4 போட்டிகளிலும், வங்கதேச அணி ஒரு போட்டியிலும் வெற்றி கண்டுள்ளன.

இதே உலகக் கோப்பையில் நடந்த 4 போட்டிகளில் இரு அணிகளும் 2-2 என்று வெற்றி பெற்றுள்ளன. இன்று உலகக் கோப்பையில் 5ஆவது ஒரு நாள் போட்டியில் இரு அணிகளும் விளையாடுகின்றன.

NED vs NZ: நியூசிலாந்திடம் சரண்டரான நெதர்லாந்து – 2ஆவது முறையாக சாண்ட்னர் 5 விக்கெட் கைப்பற்றி சாதனை!

இங்கிலாந்து – வங்கதேசம் அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர்:

அதிகமாக – 391/4 (50 ஓவர்) - 168 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி – 2005

குறைந்த ரன் - 196 (43.1) - 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி -2023

வங்கதேச அதிக ரன் - 305/6 (50) – வங்கதேசம் 8 விக்கெட்டுகளில் தோல்வி – 2017

வங்கதேச குறைந்த ஸ்கோர் - 134 (50) – வங்கதேசம் 7 விக்கெட்டுகளில் தோல்வி – 2003

இங்கிலாந்து தனி வீரர் அதிக ஸ்கோர் – ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் -154 ரன்கள் (140 பந்துகள்)

இங்கிலாந்து சிறந்த பவுலிங் - பால் கோலிங்வுட் - 6/31

வங்கதேசம் தனி நபர் அதிக ஸ்கோர் – தமீம் இக்பால் – 128 ரன்கள் (142)

வங்கதேசம் சிறந்த பவுலிங் - மஷ்ரஃப் மோர்டாசா – 4/29

India vs Afghanistan: சுப்மன் கில் இல்லாமல் டெல்லி வந்த டீம் இந்தியா: ஆப்கானிஸ்தான் போட்டியில் கில் இல்லை!

இங்கிலாந்து – வங்கதேசம் அதிகபட்சம் ஸ்கோர்:

முஷ்பிகுர் ரஹீம் (வங்கதேசம்) – 15 போட்டிகள் – மொத்த ஸ்கோர் – 575 – அதிகபட்சம் 89 ரன்கள்

தமீம் இக்பால் (வங்கதேசம்) – 17 போட்டிகள் – 557 ரன்கள் – 128 ரன்கள்

இங்கிலாந்து – வங்கதேசம் அதிக விக்கெட்டுகள்:

ஷாகீப் அல் ஹசன் – 17 போட்டிகள் – 20 விக்கெட்டுகள்

அடில் ரஷீத் – 7 போட்டிகள் – 19 விக்கெட்டுகள்

வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் அரைசதம் – நியூசிலாந்து 322 ரன்கள் குவிப்பு!

தரமசாலா மைதான போட்டிகள்:

மொத்தப் போட்டிகள் - 5

முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் வெற்றி - 1

2ஆவது பேட்டிங் செய்த போட்டிகளில் வெற்றி - 4

சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் - 202

சராசரி 2வது இன்ஸ் ஸ்கோர் - 192

அதிகபட்ச ஸ்கோர் - IND vs WI - 330/6 (50 ஓவர்கள்)

குறைந்தபட்ச ஸ்கோர் - IND vs SL - 112/10 (38.2 ஓவர்கள்)

சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 227/3 (47.2 ஓவரள்) ENG vs IND

எதிர்பார்ப்பு:

இங்கிலாந்துக்காக அதிக ரன்களை எடுப்பவர்: ஜானி பேர்ஸ்டோ / ஜோஸ் பட்லர்

இங்கிலாந்துக்காக அதிக விக்கெட்டுகளை எடுப்பவர்: மார்க் வுட் / அடில் ரஷித்

வங்கதேச அணிக்காக அதிக ரன்களை எடுப்பவர்: லிட்டன் தாஸ் / நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ

வங்கதேச அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுப்பவர்: ஷகிப் அல் ஹசன் / மெஹிதி ஹசன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios