வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் அரைசதம் – நியூசிலாந்து 322 ரன்கள் குவிப்பு!
நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை 6ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை 6ஆவது லீக் போட்டி தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து முதலில் பேட்டிங் ஆடியது.
ஹாட்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை விற்க முடிவு – சன் டிவி, கௌதம் அதானியிடம் பேச்சுவார்த்தை!
இதில், டெவான் கான்வே மற்றும் வில் யங் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் 3 ஓவர்கள் வரையில் நியூசிலாந்து ஒரு ரன் கூட எடுக்கவில்லை. 4ஆவது ஓவரில் தான் வில் யங் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கி வைத்தார். முதல் போட்டியில் 152 ரன்கள் குவித்த டெவான் கான்வே 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து நிதானமாக விளையாடிய வில் யங் 70 ரன்கள் குவித்தார். இவரைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா களமிறங்கினார். முதல் போட்டியில் 123 ரன்கள் எடுத்த ரவீந்திரா 51 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து டேரில் மிட்செல் 48 ரன்களிலும், கேப்டன் டாம் லாதம் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 4 ரன்னிலும், மார்க் சாப்மேன் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவரைத் தொடர்ந்து மிட்செல் சாண்ட்னர் 36 ரன்னிலும், மேட் ஹென்றி 10 ரன்னிலும் அவுட்டாகாமல் இருந்தனர். இறுதியாக நியூசிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சு தரப்பி நெதர்லாந்து அணியில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென், வான் டெர் மெர்வே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பாஸ் டி லீட் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
New Zealand vs Netherlands: 2 மாற்றங்களுடன் களமிறங்கும் நெதர்லாந்து – டாஸ் வென்று பவுலிங் தேர்வு!