New Zealand vs Netherlands: 2 மாற்றங்களுடன் களமிறங்கும் நெதர்லாந்து – டாஸ் வென்று பவுலிங் தேர்வு!
நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 6ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் 13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இதில், ஒவ்வொரு அணியும் முதல் போட்டியில் விளையாடி முடித்துள்ளன. ஒவ்வொரு அணிக்குமான 2ஆவது போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. இன்று நடக்கும் 6ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது. நெதர்லாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் ரியான் க்ளீன் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இதே போன்று நியூசிலாந்து அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ஜிம்மி நீசத்திற்கு பதிலாக லாக்கி ஃபெர்குசன் அணியில் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியிலும் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக டாம் லாதம் தான் இந்தப் போட்டியிலும் கேப்டனாக செயல்படுகிறார்.
IND vs AUS: சென்னையில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா உலகக் கோப்பைக்காக வந்த நடிகர் வெங்கடேஷ், சதீஷ்!
நெதர்லாந்து:
ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம்ஜீத் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், ரியான் க்ளீன், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்
நியூசிலாந்து:
டிரெண்ட் போல்ட், டெவான் கான்வே, மார்க் சாப்மேன், லாக்கி ஃபெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம் (கேப்டன்), மிட்செல் சாண்ட்னர், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, வில் யங்.
ஏற்கனவே நியூசிலாந்து தனது முதல் போட்டியில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில், நியூசிலாந்து தொடக்க வீரர் டெவான் கான்வே 153 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 123 ரன்களும் எடுத்தனர். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து தோல்வியை தழுவியது. இதில், நெதர்லாந்து அணி சார்பில் பாஸ் டி லீட் 67 ரன்கள் எடுத்தார். விக்ரம்ஜீத் சிங் 52 ரன்கள் எடுத்தார். இதில், நெதர்லாந்து 81 ரன்களில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில், தான் இன்று ஹைதராபாத் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து இடையிலான 6ஆவது லீக் போட்டி நடக்கிறது. இதில், பலம் வாய்ந்த நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 4 போட்டியிலும் நியூசிலாந்து அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், நடந்த 3 டி20 போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி வாகை சூடியிருக்கிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியுள்ளன. இதில், நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய நெதர்லாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆகையால், இன்று நடக்கும் உலகக் கோப்பை போட்டியிலும் நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானம்:
மொத்த போடிகள் – 8
முதலில் பேட்டிங் செய்த அணி – 5 முறை வெற்றி
2ஆவதாக பேட்டிங் செய்த அணி – 3 முறை வெற்றி
ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் – 288
ஆவரேஜ் 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் – 263
அதிகபட்ச ஸ்கோர் – 350/4 (50 ஓவர்), ஆஸ்திரேலியா – இந்தியா
குறைந்தபட்ச ஸ்கோர் – 174/10 (36.1 ஓவர்), இங்கிலாந்து – இந்தியா
சேஸ் செய்யப்பட்ட அதிக ரன்கள் – 252/5 (48.5 ஓவர்), தென் ஆப்பிரிக்கா – இந்தியா
குறைந்த ஸ்கோர் எடுத்து வெற்றி – 290/7 (50 ஓவர்கள்), ஆஸ்திரேலியா – இந்தியா
எதிர்பார்ப்பு:
நியூசிலாந்து அணி – 300 முதல் 350 ரன்கள் வரையில் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவே நெதர்லாந்து பேட்டிங் செய்தால், 250 – 300 ரன்கள் வரையில் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் :
டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, வில் யங், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ்
நியூசிலாந்து அணியின் பவுலிங்கில் முக்கிய வீரர்கள்:
மேட் ஹென்றி, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிரெண்ட் போல்ட், ரச்சின் ரவீந்திரா
நெதர்லாந்து அணியின் முக்கிய வீரர்கள் பேட்டிங்:
பாஸ் டி லீட், விக்ரம்ஜீத் சிங், லோகன் வான் பீக், கொலின் அக்கர்மேன், சாகிப் சுல்பிகர், பால் வான் மீகெரென்.
நெதர்லாந்து அணியின் முக்கிய வீரர்கள் பவுலிங்:
பாஸ் டி லீட், லோகன் வான் பீக், கொலின் அக்கர்மேன், பால் வான் மீகெரென், ஆர்யன் தத்.
- Bas le Leede
- Colin Ackermann
- Cricket World Cup 2023
- Devon Conway
- Hyderabad
- ICC Cricket World Cup 2023
- ICC World Cup 2023
- Kane Williamson
- NZ vs NED
- Netherlands
- Netherlands National Cricket Team
- New Zealand
- New Zealand National Cricket Team
- Rachin Ravindra
- Ryan Klein
- Scott Edwards
- Vikramjit Singh
- World Cup 2023
- Sybrand Engelbrecht