முதல் இந்திய வீரராக விராட் கோலி 11,000 ரன்களை கடந்து சாதனை; ஒரே போட்டியில் சச்சினின் சாதனையும் முறியடிப்பு!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் விராட் கோலி 38 ரன்கள் எடுத்ததன் மூலமாக 3ஆவதாக களமிறங்கி 11,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 5ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 41 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இஷான் கிஷான், ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். பின்னர் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் விராட் கோலி 67ஆவது அரைசதம் அடிக்க, கேஎல் ராகுல் 16ஆவது அரைசதத்தை அடித்தார். இதையடுத்து விராட் கோலி 85 ரன்களில் ஆட்டமிழக்க கடைசி வரை விளையாடிய கேஎல் ராகுல் 97 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார்.
இந்தியா 41.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி 38 ரன்கள் எடுத்ததன் மூலமாக 3ஆவது வரிசையில் களமிறங்கி 11,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தொடக்க வீரராக இல்லாமல் 50 ரன்னுக்கு மேல் அடித்த வீரர்களில் விராட் கோலி 113 (262 இன்னிங்ஸ்) முதலிடம் பிடித்துள்ளார். குமார் சங்கக்காரா 112 (369) 2ஆவது இடத்தில் உள்ளார். வெற்றிகரமாக சேஸிங்கில் அதிக ரன்கள் குவித்த வீரர்களிலும் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் 5517 ரன்கள் (92 இன்னிங்ஸ்), டி20 போட்டிகளில் 1621 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், சச்சின் டெண்டுல்கர் 124 இன்னிங்ஸ்களில் 5490 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். மேலும், ஐசிசி போட்டிகளில் 58 இன்னிங்ஸ் விளையாடி சச்சின் 2719 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், விராட் கோலி 2785 ரன்கள் (64 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரே போட்டியில் விராட் கோலியின் சாதனைகள்:
- ODIயில் வெற்றிகரமான ரன் சேஸிங்கில் அதிக ரன்கள் -
- ஐசிசி ஒயிட்-பால் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்துள்ளார் 2785 ரன்கள் (64 இன்னிங்ஸ்)
- உலகக் கோப்பையில் (ODI + T20I) தொடக்க ஆட்டக்காரராக இல்லாமல் அதிக ரன்கள் எடுத்தவர்.
- நம்பர் 3ல் 11,000 ரன்களை முதல் இந்திய வீரர்.
- ODIயில் ஒரு தொடக்க வீரராக இல்லாமல் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்தவர் – 113 முறை
- உலகக் கோப்பையில் அதிக முறை அரைசதம் (9 முறை) அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி 2ஆவது இடத்தை ரோகித் சர்மாவுடன் பகிர்ந்துள்ளார். சச்சின் 12 அரைசதங்களுடன் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.
- 2011 World Cup
- 2015 World Cup
- 2023 Cricket World Cup
- Australia
- CWC 2023
- Chennai
- Chepauk
- Cricket
- ICC CWC 2023
- ICC Cricket World Cup 2023
- ICC Cricket World Cup Venues
- ICC World Cup 2023
- IND vs AUS
- India
- India vs Australia
- Indian Cricket Team
- MA Chidambaram Stadium
- ODI World Cup 2023
- Ravichandran Ashwin
- Rohit Sharma
- Shubman Gill
- Team India
- Virat Kohli
- World Cup 2023
- World Cup Venues