India vs Afghanistan: சுப்மன் கில் இல்லாமல் டெல்லி வந்த டீம் இந்தியா: ஆப்கானிஸ்தான் போட்டியில் கில் இல்லை!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக சுப்மன் கில் இல்லாத இந்திய அணி டெல்லி வந்துள்ளது.
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதில், 10 அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடியுள்ளன. தற்போது ஒவ்வொரு அணிக்கும் 2ஆவது போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 11 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 9ஆவது லீக் போட்டி நடக்க இருக்கிறது.
வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் அரைசதம் – நியூசிலாந்து 322 ரன்கள் குவிப்பு!
இதற்காக இந்திய அணி சென்னையிலிருந்து புறப்பட்டு டெல்லி வந்தடைந்துள்ளது. டெல்லி வந்த இந்திய அணியில் சுப்மன் கில் இடம் பெறவில்லை. அவர் பிசிசிஐயின் மருத்துவ குழுவினருடன் சென்னையிலேயே தங்கியுள்ளார். ஏற்கனவே சுப்மன் கில் டெங்கு பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இடம் பெறவில்லை. தற்போது அவர் குணமடைந்து வரும் நிலையில், டெல்லி பயணத்தை தவிர்த்துள்ளார்.
ஹாட்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை விற்க முடிவு – சன் டிவி, கௌதம் அதானியிடம் பேச்சுவார்த்தை!
ஆதலால், அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து வரும் 14 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்க இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து 2ஆவது போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.
இதே போன்று இந்திய அணியும் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் இஷான் கிஷான், ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய முன்வரிசை வீர்ரகள் டக் அவுட்டில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இதற்கு முன்னதாக டெல்லியில் நடந்த போட்டியில் தான் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
New Zealand vs Netherlands: 2 மாற்றங்களுடன் களமிறங்கும் நெதர்லாந்து – டாஸ் வென்று பவுலிங் தேர்வு!