மகளிர் பிரீமியர் லீக்கில் சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Do you know the prize money for Mumbai Indians who won Womens Premier League 2023?

ஆண்கள் ஐபிஎல் தொடரைப் போன்று பெண்களுக்கும் மகளிர் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் என்று 5 அணிகள் மட்டுமே இந்த தொடரில் பங்கேற்றன. கடந்த 4 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடர் நேற்று 26ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியுடன் முடிவடைந்தது. எட்டு எட்டு போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.

சேப்பாக்கம் மைதானத்தில் ரசிச்சு ரசிச்சு ரசிகர்கள் அமரும் இருக்கைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் தோனி!

அதிக போட்டிகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகள் பெற்றிருந்த டெல்லி கேபிடல்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நடந்த எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், யுபி வாரியர்ஸ் அணியும் மோதின. இதில், மும்பை இந்தியன்ஸ் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு தங்கம் வென்று அசத்தல்!

இதைத் தொடர்ந்து நேற்று நடந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியும் மோதின. இந்தப் போட்டியை ஆண்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நேரில் கண்டு ரசித்தனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அணியின் கேப்டன் மெக் லேனின்ல் 35 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதுவே போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஷிகா பாண்டே மற்றும் ராதா யாதவ் இருவரும் அதிரடி காட்டினர். சிக்சரும், பவுண்டரியும் விளாசவே டெல்லி கேபிடல்ஸ் ஓரளவு 131 என்று ரன்களை எட்டியது.

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு சிறந்த கேட்ச் ஆஃப் தி சீசன்; யஷ்டிகா பாட்டீயாவிற்கு வளர்ந்து வரும் சிறந்த வீராங்கனை!

இதையடுத்து 132 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யஷ்டிகா பாட்டீயா அதிர்ச்சி கொடுத்தார். அவர் 4 ரன்களில் வெளியேறினார். மேத்யூஸூம் 13 ரன்களில் வெளியேற 23 ரன்களில் 2 விக்கெட் இழந்து தடுமாறியது. அதன் பிறகு வந்த ஹர்மன்ப்ரீத் கவுர், நாட் சிவர் பிரண்ட் இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். ஹர்மன்ப்ரீத் கவுர் 37 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். சிவர் பிரண்ட் 55 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 60 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பரபரப்பாக தொடங்கிய டிக்கெட் விற்பனை: நீண்ட வரிசையில் காத்திருந்த டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்!

நாட் சிவர் ஆட்டநாயகியாகவும், ஹீலி மேத்யூஸ் தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தொடரில் அதிக மதிப்புமிக்க வீராங்கனையாக வலம் வந்த ஹீலி மேத்யூஸ் பர்பிள் கேப் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் ஆரஞ்சு கேப் வைத்திருந்தார். இந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு ரூ.6 கோடியும், 2ஆவது இடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ரூ.3 கோடியும், 3ஆவது இடம் பிடித்த யுபி வாரியர்ஸ் அணிக்கு ரூ.1 கோடியும் பரிசு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios