சென்னையில் பரபரப்பாக தொடங்கிய டிக்கெட் விற்பனை: நீண்ட வரிசையில் காத்திருந்த டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்!

சென்னையில் நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கியுள்ள நிலையில், நீண்ட வரிசையில் காத்திருநது டிக்கெட் வாங்கிச் சென்றனர்.
 

IPL ticket sale has started in Chennai For CSK First Match Against LSG on April 3, 2023

ஒவ்வொரு ஆண்டும் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் 31 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன். இதைத் தொடர்ந்து சென்னை அணிக்கான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி நடக்கிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் ஐபிஎல் திருவிழா நடத்தப்படவில்லை. அந்த வகையில் 3ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் வரும் 3ஆம் தேதி ஐபிஎல் போட்டி நடக்கிறது.

WPL 2023: அறிமுக சீசனில் முதல் கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை..! டெல்லி கேபிடள்ஸ் ஏமாற்றம்

இந்தப் போட்டிக்கான கவுண்டர் டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. இதற்கான நள்ளிரவு முதலே ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து டிக்கெட்டுகள் வாங்கிச் செல்கின்றனர். கேலரி வாரியாக டிக்கெட் விலை மாறுபடுகிறது.

டிக்கெட் கட்டணம்:

கேலரி C/D/E Lower - நேரடி விற்பனை - ரூபாய் 1,500.

கேலரி  I/J/K Upper  - நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை - ரூபாய் 2,000.

கேலரி  I/J/K Lower - நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை - ரூபாய் 2,500. 

கேலரி  D/E Upper  - ஆன்லைன் விற்பனை -  ரூபாய் 3,000.

சென்னையில் நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிகள்:

ஏப்ரல் 3 - சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், இரவு 7:30 மணி 

ஏப்ரல் 12 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ், இரவு 7:30 மணி 

ஏப்ரல் 21 - சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், இரவு 7:30 மணி 

ஏப்ரல் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ், பிற்பகல் 3:30 மணி 

மே 6 - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ், பிற்பகல் 3:30 மணி 

மே 10 - சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ், இரவு 7:30 மணி 

மே 14 - சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இரவு 7:30 மணி 

டி காக் சதம்; தென்னாப்பிரிக்கா காட்டுத்தனமான பேட்டிங்! டி20-யில் மிகப்பெரிய ரன் சேஸிங்கை செய்து வரலாற்று சாதனை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:

எம் எஸ் தோனி - ரூ. 12 கோடி - பேட்ஸ்மேன்/விக்கெட் கீப்பர்
டெவோன் கான்வே - ரூ.1 கோடி - பேட்ஸ்மேன்
ருத்துராஜ் கெய்க்வாட் - ரூ.6 கோடி - பேட்ஸ்மேன்
அம்பத்தி ராயுடு - ரூ.6.75 கோடி - பேட்ஸ்மேன்/விக்கெட் கீப்பர்
சுப்ரான்ஷு சேனாபதி - ரூ.20 லட்சம் - பேட்ஸ்மேன்
மொயீன் அலி - ரூ.8 கோடி - ஆல்ரவுண்டர்
ஷிவம் துபே - ரூ.4 கோடி - ஆல்ரவுண்டர்
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் - ரூ.1.5 கோடி - பவுலர்
டுவைன் பிரிட்டோரியஸ் - ரூ.50 லட்சம் - ஆல்ரவுண்டர்
மிட்செல் சான்ட்னர் - ரூ.1.9 கோடி - பவுலர்
ரவீந்திர ஜடேஜா - ரூ.16 கோடி - ஆல்ரவுண்டர்
துஷார் தேஷ்பாண்டே - ரூ.20 லட்சம் - பவுலர்
முகேஷ் சௌத்ரி சிங் - ரூ.20 லட்சம் - பவுலர்
மதீஷா சௌத்ரி சிங் - ரூ.20 லட்சம் - பவுலர்
தீபக் சஹார்  - ரூ.14 கோடி - பவுலர்
சிமர்ஜீத் சிங் - ரூ.20 லட்சம் - பவுலர்
பிரசாந்த் சோலங்கி - ரூ.1.2 கோடி - பவுலர்
மகேஷ் தீக்ஷனா - ரூ.70 லட்சம் - பவுலர்
அஜிங்க்யா ரஹானே - ரூ.50 லட்சம் - பேட்ஸ்மேன்
பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி - ஆல்ரவுண்டர்
ஷேக் ரஷீத் - ரூ.20 லட்சம் - பேட்ஸ்மேன்
நிஷாந்த் சிந்து - ரூ. 60 லட்சம் - ஆல்ரவுண்டர்
சிசாந்த் மகாலா - ரூ.1 கோடி - பவுலர்
அஜய் மண்டல் - ரூ. 20 லட்சம் - ஆல் ரவுண்டர்
பகத் வர்மா - ரூ.20 லட்சம் - ஆல் ரவுண்டர்

மொத்த வீரர்கள் - 25 (இந்திய வீரர்கள் 17, வெளிநாட்டு வீரர்கள் 8)
இருப்பு தொகை ரூ.1.5 கோடி
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios