ஐபிஎல் கிரிக்கெட்டில் நடுவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
ஐபிஎல் கிரிக்கெட்டில் கள நடுவர்களுக்கும் சம்பளம் மற்றும் ஸ்பான்ஸர்கள் மூலமாக வருமானம் அதிகமாக கொடுக்கப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி நடுவர்களுக்கும் பணம் கொழிக்கும் ஒன்றாக திகழ்கிறது. எலைட் பேனர் மற்றும் டெவலப்மெண்ட் அம்பயர் என்று இரு வகையான நடுவர்கள் ஒரு போட்டியில் களத்தில் நடுவர்களாக இருப்பார்கள். ரொம்பவே முக்கியமான போட்டி என்றால் எலைட் பேனல் அம்பயர் தான் களத்தில் நடுவராக இருப்பார். இதுவே சாதாரண போட்டி என்றால் டெவலப்மெண்ட் அம்பயர் களத்தில் இறக்கப்படுவார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று அரசியல் களத்தில் ஆட தயாரான அம்பத்தி ராயுடு!
சரி, இவர்களுக்கு சம்பளம் எப்படி என்று கேட்டால், எலைட் பேனல் அம்பயர்களுக்கு ஒரு ஐபிஎல் போட்டியில் ரூ.1,98,000 வரையில் சம்பளம் தரப்படுகிறது. இதற்கு முன்னதாக ரூ.1,75,000 வரையில் சம்பளம் தரப்பட்டது. அதோடு, டெய்லி ஸ்டைஃபண்டாக ரூ.12,500 தரப்படும். இதுமட்டுமின்றி ஹோட்டல், போக்குவரத்து என்று அதற்கு தனியாகவும் தரப்படும்.
பிக்ஷர் ஆஃப் தி டே: சிஎஸ்கே சாம்பியனுக்குப் பிறகு குடும்பத்தோடு போட்டோ எடுத்த தோனி!
ஒரு ஐபிஎல் போட்டியில் எல்லா சீசனிலும் எலைட் அம்பயர் நடுவராக இருந்தால் அவர் மொத்தமாக ரூ.40 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம். இதுவே டெவலப்மெண்ட் நடுவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.59,000 வரையில் கிடைக்கும். ஆனால், இதற்கு முன்னதாக ரூ.40,000 வழங்கப்பட்டது. ஆனால், இவர்களுக்கு ஸ்டைஃபண்ட் கிடைக்காது.
அடடே, சாக்ஷி தோனி மற்றும் அனுஷ்கா சர்மா ஒரே ஸ்கூல், ஒரே க்ளாஸா?
ஒரு எலைட் பேனல் நடுவர், எழுத்துப்பூர்வமாக சிறப்பாக செயல்படுகிறார் என்று சிபாரிசு செய்தால் மட்டுமே டெவலப்மெண்ட் அம்பயராக முடியும். இக்கட்டான கட்டத்தில் எப்படி புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள், போட்டியில் எப்படி கையாள்கிறார்கள், முடிவுகளை எப்படி எடுக்கிறார்கள் என்பதையெல்லாம் பொறுத்துதான் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். எலைட் பேனில் நடுவர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தால் தான் அவர்களுக்கு சிறந்த ஊதியம் கிடைக்கும்.
நடுவர்களுக்கு போட்டி வருமானத்தை தொடர்ந்து ஸ்பான்ஸர் நிறுவனங்களிடமிருந்தும் கூடுதலாக வருமானம் கிடைக்கும். அதாவது, பேடிஎம் மாதிரி. தற்போது பேடிஎம் தான் ஸ்பான்ஸராக உள்ளது. பேடிஎம் என்று அச்சிடப்பட்ட உடையில் தான் நடுவர்கள் களமிறங்குகின்றனர். சீசன் முடிந்ததும் நடுவர்களுக்கு இந்த பேடிஎம் நிறுவனம் ரூ.7,33000 கொடுக்கிறது.
இதற்கு முன்னதாக ரூ.5000 வீதம் ஒவ்வொரு போட்டிக்கும் ஸ்பான்ஸர் நிறுவனம் கொடுத்துள்ளது. இப்போது ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு நிறுவனமாக வரும் நிலையில், இந்த சீசனில் பேடிஎம் நிறுவனம் வந்தது. இதன் காரணமாக ஒரு சீசன் முடிந்ததும் எலைட் நடுவர்கள் ரூ.47 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையில் சம்பாதிக்க முடியும்.
எப்படி நடுவராக முடியும்? நடுவரின் கல்வி தகுதி என்ன?
நடுவராவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நடுவராவதற்கு அவர் கண்டிப்பாக 42 கிரிக்கெட் விதிகள் குறித்து தெரிந்திருக்க வேண்டும். நடுவராவதற்கு முதலில் மாநில கிரிக்கெட் சங்கம் நடத்தும் சர்டிஃபிகேட் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு மாநில கிரிக்கெட் சங்கம் நடத்தும் போட்டிகளில் நடுவராக களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும். அதில், மாநில கிரிக்கெட் சங்கத்தின் நம்பிக்கையினை பெற்றால் மட்டுமே பிசிசிஐ நடுவராக முடியும்.
கேட்சே பிடிக்க மாட்ரான், ஆட்டோகிராஃப் வங்க மொத ஆளா வந்துர்றான் – தீபக் சாஹர் அண்ட் தோனி சமரசம்!
அதற்கு 2 தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும். பிசிசிஐ நடத்தும் லெவல் 1 தேர்விலும், லெவல் 2 தேர்விலும் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு ஐசிசி உள்ளூர் போட்டிகளில் நடுவராக களமிறங்கும் வாய்ப்பினை அளிக்கும். இதில், நம்பிக்கையினை பெற்றால் மட்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக நீங்கள் அறிவிக்கப்படுவீர்கள்.