துணியால் மறைத்து கொண்டு வரப்பட்ட ஐபிஎல் டிராபி: தி.நகர் திருப்பதி ஏழுவெங்கடாஜலபதி கோயிலில் வைத்து பூஜை!
துணியால் மறைத்து கொண்டு வரப்பட்ட ஐபிஎல் டிராபியை தி நகரில் உள்ள திருப்பதி ஏழுவெங்கடாஜலபதி கோயிலில் வைத்து டிராபிக்கு பூஜை போடப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டி 3 நாட்கள் நடந்துள்ளது. பதினாறாவது ஐபிஎல் சீசனுக்கான இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின.
கேட்சே பிடிக்க மாட்ரான், ஆட்டோகிராஃப் வங்க மொத ஆளா வந்துர்றான் – தீபக் சாஹர் அண்ட் தோனி சமரசம்!
இதில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மழை குறுக்கீடு காரணமாக 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டு சிஎஸ்கேயின் வெற்றிக்கு 171 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
சொன்னபடியே கோப்பையை தட்டித்தூக்கி கெத்து காட்டிய தோனி... அன்புடன் வாழ்த்திய குஷ்பு
இதையடுத்து டெவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ரஹானே, அம்பத்தி ராயுடு ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக ஜடேஜா வந்து கடைசி ஓவரில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றியின் மூலமாக சிஎஸ்கே அணி 5ஆவது முறையாக டைட்டில் வென்றுள்ளது.
இந்த நிலையில், வெற்றி பெற்ற கையோடு சென்னை வந்த சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அண்ட் டீம், ஐபிஎல் டிராபியை துணி கொண்டு மறைத்து கொண்டு வந்துள்ளனர். அவர்களுடன் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபென் ஃப்ளெமிங் மட்டும் வந்துள்ளார். மற்ற சிஎஸ்கே வீரர்கள் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பியதாக காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சென்னைக்கு கொண்டு வந்த ஐபிஎல் டிராபியை முதலில் தி நகரில் உள்ள திருப்பதி ஏழுவெங்கடாஜலபதி கோயிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்துள்ளனர்.
இதையும் படிங்க;- ஓம் சக்தி ஓம் சக்தி சமயபுர்த்து மகமாயி என்று கெஞ்சி வெறித்தனமாக சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய ரசிகர்!