Asianet News TamilAsianet News Tamil

கடைசி நிமடங்களில் BP மாத்திரை போட வைத்த போட்டி! மக்கள் மனங்களை வென்றெடுத்த தோனி! ஜெயக்குமார் புகழாரம்.!

 வியூகங்கள் எதிரணியை மட்டுமல்ல ரசிகர்களையும் வியப்படைய செய்கிறது. ஐந்தாவது முறையாக கோப்பையையும் மக்கள் மனங்களையும் வென்றெடுத்து விட்டார் தோனி.

Dhoni who won peoples hearts.. Jayakumar praise
Author
First Published May 30, 2023, 12:42 PM IST

ஐந்தாவது முறையாக கோப்பையையும் மக்கள் மனங்களையும் வென்றெடுத்து விட்டார் தோனி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம் சூட்டியுள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் ஆடியது. இதில், விருத்திமான் சகா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க;- ஓம் சக்தி ஓம் சக்தி சமயபுர்த்து மகமாயி என்று கெஞ்சி வெறித்தனமாக சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய ரசிகர்!

Dhoni who won peoples hearts.. Jayakumar praise

பின்னர் சிஎஸ்கே பேட்டிங் ஆடிய முதல் ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. இதனால், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதையடுத்து டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில், டெவான் கான்வே 47 ரன்களும், ருத்துராஜ் கெய்க்வாட் 26 ரன்களும் .அஜிங்கியா ரஹானே 27 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 2 பந்துகளில் 9 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது. 5வது பந்தில் சிக்‌சரும், இறுதி பந்தில் பவுண்டரி அடித்து ஜடேஜா வெற்றி பெற செய்தார். இந்த வெற்றி மைதானத்தில் சென்னை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது. 

இதையும் படிங்க;- நெஹ்ரா தான் குஜராத் டைட்டன்ஸ் தோல்விக்கு காரணமா? – டுவிட்டரில் தாறுமாறாக வந்த விமர்சனம்!

Dhoni who won peoples hearts.. Jayakumar praise

ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எப்போதும் போல எல்லோரையும் கடைசி நிமடங்களில் BP மாத்திரை போட வைத்த போட்டி என ஜெயக்குமார் கூறியுள்ளார். 

 

 

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- எப்போதும் போல எல்லோரையும் கடைசி நிமடங்களில் BP மாத்திரை போட வைத்த போட்டி.. வியூகங்கள் எதிரணியை மட்டுமல்ல ரசிகர்களையும் வியப்படைய செய்கிறது. ஐந்தாவது முறையாக கோப்பையையும் மக்கள் மனங்களையும் வென்றெடுத்து விட்டார் தோனி! தோனி ஒரு சகாப்தம்! வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios