கேட்சே பிடிக்க மாட்ரான், ஆட்டோகிராஃப் வங்க மொத ஆளா வந்துர்றான் – தீபக் சாஹர் அண்ட் தோனி சமரசம்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் கொடுத்த எளிய கேட்சை கோட்டை விட்ட தீபக் சாஹர் குறித்து ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் சிஎஸ்கே கேப்டன் கூறியுள்ளார்.

MS Dhoni Talk about Deepak Chahar Dropped Catch Due to CSK vs GT IPL Match at Ahmedabad

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்தது. இதில், தொடக்க வீரர் சுப்மன் கில் 3 ரன்களாக இருந்த போது கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் கோட்டை விட்டார்.

சொன்னபடியே கோப்பையை தட்டித்தூக்கி கெத்து காட்டிய தோனி... அன்புடன் வாழ்த்திய குஷ்பு

ஆனால், கில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாத போதும் கூட 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சென்னை வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 96 ரன்கள் எடுத்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு முதல் ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேரமாக பெய்த மழை காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு சிஎஸ்கே அணிக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து சிஎஸ்கே வீரர்கள் ஒவ்வொருவரும் அதிரடியாக ஆடினர். இதில், சிஎஸ்கேயின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார்.

கடைசி நிமடங்களில் BP மாத்திரை போட வைத்த போட்டி! மக்கள் மனங்களை வென்றெடுத்த தோனி! ஜெயக்குமார் புகழாரம்.!

இதில் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கேயின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தான் 5ஆவது பந்தை ஜடேஜா சிஸ்கருக்கு விரட்டினார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஜடேஜா அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.

இதையும் படிங்க;- ஓம் சக்தி ஓம் சக்தி சமயபுர்த்து மகமாயி என்று கெஞ்சி வெறித்தனமாக சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய ரசிகர்!

இதையடுத்து பரிசு கொடுப்பதற்கு முன்னதாக மைதானத்தில் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதற்கு தீபம் சாஹர் சென்றார். அப்போது, தோனி கேட்சே பிடிக்க மாட்றான் இந்த லட்சனத்துல ஆட்டோகிராஃப் வேணும்னு வர்றான் என்று கிண்டலடித்துள்ளார். அதன் பிறகு தீபக் சாஹருக்கு ஜெர்சியில் ஆட்டோகிராஃப் போட்டுள்ளார். அப்போது அவருக்கு அருகாமையில் ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios