கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று அரசியல் களத்தில் ஆட தயாரான அம்பத்தி ராயுடு!
அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியில் தான் ஓய்வு பெறுவதாக சிஎஸ்கே அணி வீரர் அம்பத்தி ராயுடு. இதையடுத்து சிஎஸ்கே 5ஆவது முறையாக சாம்பியனானதைத் தொடர்ந்து, அவரது கையாலயே இந்த சீசனுக்கான ஐபிஎல் டிராபியை பெற வைத்தார். இது தொடர்பான வீடியோவையும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.
பிக்ஷர் ஆஃப் தி டே: சிஎஸ்கே சாம்பியனுக்குப் பிறகு குடும்பத்தோடு போட்டோ எடுத்த தோனி!
இந்த நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சிஎஸ்கே ஐபிஎல் டிராபியை வென்றதைத் தொடர்ந்து இரவு முழுவதும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. அப்படிப்பட்ட இந்த தருணத்தில் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் நான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். சிறு வயதிலிருந்து டென்னிஸ் பந்து கொண்டு விளையாடிய போது நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.
அடடே, சாக்ஷி தோனி மற்றும் அனுஷ்கா சர்மா ஒரே ஸ்கூல், ஒரே க்ளாஸா?
இந்த 30 வருடங்கள் மிகச்சிறந்த பயணமாக அமைந்தது. அண்டர் 15 காலத்திலிருந்தே நான் இந்திய அணிக்காக விளையாடி வருகிறேன். கடந்த 2013 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்த தருணத்தில் பிசிசிஐ, ஆந்திர பிரதேசம் கிரிக்கெட் வாரியம், விதர்பா, பரோடா கிரிக்கெட் வாரியம், ஹதராபாத் என்று எனக்கு வாய்ப்புகள் கொடுத்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
எனது தந்தை எனது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியுள்ளார். எனது குடும்பமும் எனக்கு பக்க பலமாக இருந்திருக்கிறது. ரசிகர்கள், அணி வீரர்கள், நிர்வாகிகள் என்று அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் தருணமாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கேட்சே பிடிக்க மாட்ரான், ஆட்டோகிராஃப் வங்க மொத ஆளா வந்துர்றான் – தீபக் சாஹர் அண்ட் தோனி சமரசம்!
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு, அரசியலில் களமிறங்கியுள்ளார். அதுவும், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் மக்களுக்கு சேவையாற்ற நினைப்பதாக அம்பத்தி ராயுடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். மேலும், எப்போதும் மக்கள் மத்தியில் இருக்க விரும்புவதாக கூறினார். அரசியலுக்கு வந்தால், நேர்மையாக பணியாற்றுவேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.