அடடே, சாக்ஷி தோனி மற்றும் அனுஷ்கா சர்மா ஒரே ஸ்கூல், ஒரே க்ளாஸா?
சாக்ஷி தோனி அனுஷ்கா சர்மா இருவரும் ஒன்றாக இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் இருவர் எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலி. இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அதுமட்டுமின்றி இருவருக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறது. இதையும் தாண்டி தோனி மற்றும் விராட் கோலியின் மனைவிகளுக்கு ஒற்றுமை ஒன்று இருக்கிறது.
அது வேறொன்றுமில்லை, இருவருமே சிறுவயது முதலே தோழிகள். யாரும் சொன்னால் நம்பமாட்டார்கள், இருவரும் ஒன்றாக இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், அனுஷ்கா சர்மா, அவரது சகோதரர் கர்னேஷ் சர்மா மற்றும் சாக்ஷி தோனி ஆகியோர் ஒன்றாக போஸ் கொடுத்துள்ளனர். அதோடு அவர்கள் படித்தது எல்லாம் அசாம் பள்ளியில் தானாம்.
கேட்சே பிடிக்க மாட்ரான், ஆட்டோகிராஃப் வங்க மொத ஆளா வந்துர்றான் – தீபக் சாஹர் அண்ட் தோனி சமரசம்!
அனுஷகா சர்மாவின் தந்தை ராணுவ வீரர். ஆதலால், தனது குடும்பத்துடன் நாடு முழுவதும் சுற்றியிருக்கிறார். ஒருகட்டத்தில் சாக்ஷி தோனி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் ஒரே பள்ளியில் படிக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. அதோடு இருவரும் ஒரே வகுப்பும் கூட.
இதையும் படிங்க;- ஓம் சக்தி ஓம் சக்தி சமயபுர்த்து மகமாயி என்று கெஞ்சி வெறித்தனமாக சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய ரசிகர்!
ஆம், அசாமின் புனித மேரி பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர். இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் இருவருமே கிரிக்கெட் வீரர்களை தான் திருமணம் செய்திருக்கிறார்கள். சாக்ஷி தோனிக்கு ஜிவா என்ற மகளும், அனுஷ்கா விராட் கோலிக்கு வாமிகா என்ற மகளும் இருக்கின்றனர். இதற்கிடையில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் டைட்டிலை வென்றுள்ளது.