கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி 18 ஒரு நாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், இந்தியா வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் முதலில் பங்கேற்றது. இதில், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்று கைப்பற்றியது. இதையடுத்து நடந்த 2 ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா 1-1 என்று வெற்றி பெற்றிருந்தன. கடைசியாக தொடரை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று டாரௌபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடந்தது.
இதில், வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பவுலிங் செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. இதில், இஷான் கிஷான் 77 ரன்கள், சுப்மன் கில் 85 ரன்கள், சஞ்சு சாம்சன் 51 ரன்கள், ஹர்திக் பாண்டியா 70 (நாட் அவுட்) ரன்கள் எடுத்தனர்.
பின்னர், கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் 0, கைல் மேயர்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷாய் ஹோ 5, கீசி கார்டி 6, ஷிம்ரான் ஹெட்மயர் 4, ரொமாரியோ ஷெப்பார்டு 8, ஜெய்டென் சீல்ஸ் 1 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
WI vs IND 3rd ODI: இஷான் கிஷான், கில், ஹர்திக் பாண்டியா அதிரடி; இந்தியா 351 ரன்கள் குவிப்பு!
அலிக் அதானாஸ் 32 ரன்களும், மோத்தி 39 ரன்களும் எடுக்கவே வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. பந்து வீச்சு தரப்பில், இந்திய அணியின் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், ஜெயதேவ் உனத்கட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நடச்த்திரமான விராட் கோலி இடம் பெறவில்லை. எனினும் சப்ஸ்டிடியூட் வீரராக மைதானத்திற்கு வந்தார். இந்தப் போட்டியில் மட்டுமின்றி 2ஆவது ஒரு நாள் போட்டியிலும் விராட் கோலி விளையாடவில்லை. இந்திய அணி அடுத்து மிக முக்கியமான ஆசிய கோப்பை 2023 மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள நிலையில், அதற்காக வீரர்களை தயார்படுத்தும் வகையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறது.
இதன் காரணமாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் விராட் கோலி கிட்டத்தட்ட 18 ஒரு நாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்துள்ளார். அதிகபட்சமாக கடந்த 2022 ஆம் ஆண்டு 13 ஒரு நாள் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 ஒரு நாள் போட்டிகளில் இடம் பெறவில்லை.
இப்படி ஒட்டு மொத்தமாக கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் என்று பார்த்தால் அவர் 40 ஒரு நாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு வாய்ப்பு?
