WI vs IND 3rd ODI: சாதனையாளர்களின் பட்டியலில் இடம் பிடித்த இஷான் கிஷான்: 3ஆவது ஒரு நாள் போட்டியிலும் அரைசதம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் தொடக்க வீரர் இஷான் கிஷான் அரைசதம் அடித்ததன் மூலமாக சாதனையாளர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டாரோபாவில் உள்ள (தாரூபா) பிரையன் லாரா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி விளையாடி வருகிறது.
டாஸில் தோற்ற இந்திய அணி: ருதுராஜ், ஜெயதேவ் உனத்கட்டிற்கு வாய்ப்பு!
இதில், ரோகித் சர்மா, விராட் கோலி, அக்ஷர் படேல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் இடம் பெறவில்லை. மாறாக இந்தப் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெயதேவ் உனத்கட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு வாய்ப்பு?
இதில், வழக்கம் போல் இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இஷான் கிஷான், 9 ரன்கள் எடுத்திருந்த போது, கைல் மேயர்ஸ் ஓவரில் கொடுத்த எளிதான கேட்சை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீச் கார்டி கோட்டைவிட்டார். அதன் பிறகு சுதாரித்து கொண்டு விளையாடிய இஷான் கிஷான் பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார்.
கடைசியாக, 49 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு ரன் எடுத்து ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 6ஆவது அரைசதத்தை நிறைவு செய்தார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே சிரீஸில் தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகளிலும் அரைசதம் அடித்துள்ளார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இஷான் கிஷான், 2ஆவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்திருந்தார்.
பிசிசிஐயின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் டெண்டர் வெளியீடு; ஆகஸ்ட் 21 கடைசி தேதி!
இப்படி ஒரே சீரிஸில் தொடர்ந்து அரைசதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இஷான் கிஷானும் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (1982), வெங்சர்கார் (1985), முகமது அசாருதீன் (1993), எம்.எஸ்.தோனி (ஆஸ்திரேலியா - 2019), ஷ்ரேயாஸ் ஐயர் (நியூசிலாந்து - 2020), இஷான் கிஷான் (வெஸ்ட் இண்டீஸ் - 2023) ஆகியோர் 3 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
இந்திய அணியில் ஆணவம் இல்லை – கபில் தேவ் விமர்சனத்திற்கு ஜடேஜா பதிலடி!