இந்திய அணியில் ஆணவம் இல்லை – கபில் தேவ் விமர்சனத்திற்கு ஜடேஜா பதிலடி!
இந்திய அணியை விமர்சனம் செய்த முன்னாள் இந்திய வீரர் கபில் தேவின் கருத்துக்களை விமர்சிக்கும் வகையில் ரவீந்திர ஜடேஜா பதில் அளித்துள்ளார்.
அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்தியாவில் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இதற்காக இந்திய அணியை தயார் செய்யும் வகையில் தேர்வுக் குழு தலைவாக பொறுப்பேற்றுள்ள அஜித் அகர்கர் ஒவ்வொரு வீரராக களமிறக்கி சோதனை செய்து வருகிறார். ஆம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அக்ஷர் படேல் களமிறக்கப்பட்டனர்.
30 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் 3ஆவது ஒருநாள் போட்டி பாதிக்குமா?
ஆனால், இந்தப் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ்வும் தன் பங்கிற்கு இந்திய அணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி தொடர்ந்து ஐசிசி தொடர்களில் தோல்விகளை சந்தித்து வருகிறது.
மேஜர் லீக்கில் அதிரடி ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்பிய நிக்கோலஸ் பூரன்!
அதுமட்டுமின்றி இந்திய வீரர்கள் லேசாக காயமடைந்தால் அவர் ஓய்வு எடுக்க சென்றுவிடுகிறார். ஆனால், இதுவே ஐபிஎல் தொடர்களில் ஒரு வீரர் காயம் அடைந்தாலும் அதனை பொறுத்துக் கொண்டு பணத்திற்காக விளையாடுகிறார். ஐபிஎல் தொடர் மூலமாக வரும் பணம் மூலமாக வீரர்களுக்கு ஆணவம் வந்துள்ளது என்று விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ரவீந்திர ஜடேஜா கூறியிருப்பதாவது: இந்திய அணியில் எந்த ஆணவமும் இல்லை. ஆனால், அவர் இதனை எப்போது சொன்னார் என்று எனக்கு தெரியாது. நான் சமூக வலைதளங்களில் இதை தேடுவதும் இல்லை. அனைவருக்கும் அவர்களுக்கு கருத்து என்று ஒன்று உள்ளது. அதிலேயும், முன்னாள் இந்திய வீரர்கள் கருத்து சொல்ல உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.
Eng vs Aus 5th Test: போராடி தோற்ற ஆஸ்திரேலியா: தொடரை 2-2 என்று சமன் செய்த இங்கிலாந்து!