WI vs IND ODI:அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன்: ஒரு ஆண்டுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2ஆவது அரைசதம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து ஆட்டமிழந்துள்ளார்.

Sanju Samson hit his half century During WI vs IND 3rd ODI Match at Brian Lara Stadium Tarouba Trinidad

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி தற்போது டாரூபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் விளையாடி வருகிறது. இதில், தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர்.

WI vs IND 3rd ODI: சாதனையாளர்களின் பட்டியலில் இடம் பிடித்த இஷான் கிஷான்: 3ஆவது ஒரு நாள் போட்டியிலும் அரைசதம்!

இஷான் கிஷான் 9 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கோட்டைவிட்டார். இதன் பலனாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே சீசனில் 3ஆவது முறையாக அரைசதம் அடித்தார். எனினும் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். அவர் 64 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் உள்பட 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

டாஸில் தோற்ற இந்திய அணி: ருதுராஜ், ஜெயதேவ் உனத்கட்டிற்கு வாய்ப்பு!

அதன் பிறகு வந்த ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கடைசியாக வாய்ப்பாக இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். அவர், கடந்த போட்டியில் 9 ரன்களில் ஆட்டமிழந்திருந்தாலும், இந்தப் போட்டியில் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் 2ஆவது பந்திலேயே அசால்டாக சிக்ஸர் அடித்தார். அவர் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார். இந்தப் போட்டியில் 41 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உள்பட 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு வாய்ப்பு?

இதன் மூலமாக ஒரு வருடத்திற்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2ஆவது முறையாக அரை சதம் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோமாரியோ ஷெப்பார்டு ஓவரில் அவர் ஆட்டமிழந்ததைப் போன்று கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி ஷெப்பர்டு ஓவரில் 51 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன மூலமாக ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடருக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

பிசிசிஐயின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் டெண்டர் வெளியீடு; ஆகஸ்ட் 21 கடைசி தேதி!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios