WI vs IND 3rd ODI: இஷான் கிஷான், கில், ஹர்திக் பாண்டியா அதிரடி; இந்தியா 351 ரன்கள் குவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராஅ 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 351 ரன்கள் குவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி தற்போது டாரூபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் விளையாடி வருகிறது. இதில், தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர்.
இஷான் கிஷான் 9 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கோட்டைவிட்டார். இதன் பலனாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே சீசனில் 3ஆவது முறையாக அரைசதம் அடித்தார். எனினும் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். அவர் 64 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் உள்பட 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு வந்த ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கடைசியாக வாய்ப்பாக இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். அவர், கடந்த போட்டியில் 9 ரன்களில் ஆட்டமிழந்திருந்தாலும், இந்தப் போட்டியில் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் 2ஆவது பந்திலேயே அசால்டாக சிக்ஸர் அடித்தார். அவர் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார். இந்தப் போட்டியில் 41 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உள்பட 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் தொடக்க வீரராக விளையாடி வந்த சுப்மன் கில் இந்தப் போட்டியில் அரைசதம் அடித்து 85 ரன்களில் வெளியேறினார். அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை 15 ரன்களில் கோட்டைவிட்டார்.
Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு வாய்ப்பு?
இவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். ஆரம்பித்தில் நிதானமாக ஆடி வந்த அவர் அதன் பிறகு அதிரடியாக விளையாடினார். ஒருபுறம் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் 35 ரன்களில் ஆட்டமிழக்க ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இறுதியாக பாண்டியா 70 ரன்கள் எடுக்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்தது.
டாஸில் தோற்ற இந்திய அணி: ருதுராஜ், ஜெயதேவ் உனத்கட்டிற்கு வாய்ப்பு!
ஹர்திக் பாண்டியா 52 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 70 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஜடேஜா 8 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக யாரும் 100 ரன்கள் எடுக்காமல் இந்திய அணி அதிகபட்சமாக 351 ரன்கள் குவித்துள்ளது. இதற்கு முன்னதாக இலங்கைக்கு எதிராக 350 ரன்கள் எடுத்திருந்தது.
பிசிசிஐயின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் டெண்டர் வெளியீடு; ஆகஸ்ட் 21 கடைசி தேதி!