ஆதித்யா கணேஷ், சுபோத் பதி அதிரடியால் திண்டுக்கல் டிராகன்ஸ் 170 ரன்கள் குவிப்பு!

சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்துள்ளது.

Dindigul Dragons Scored 170 Runs against Chepauk Super Gillies in 11th Match of TNPL 2023

தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் 11ஆவது போட்டி இன்று நடக்கிறது. இதில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றா. இதில், டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

டிக்ளேர் செய்ததில் துளி கூட கவலையில்லை; நெக்ஸ் போட்டியில் இதை விட அதிரடியாக ஆடுவோம்: பென் ஸ்டோக்ஸ்!

திண்டுக்கல் டிராகன்ஸ்:

ஷிவன் சிங், எஸ் அருண், பாபா இந்திரஜித், சி சரத் குமார், சுபோத் பதி, ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), பூபதி குமார், எம் மதிவாணன், பி சரவண குமார், ஆதித்யா கணேஷ், ராகுல்.

சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்:

என் ஜெகதீசன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சந்தோஷ் ஷிவ், பாபா அபாரஜித், சஞ்சய் யாதவ், உதிரசாமி சசிதேவ், எஸ் ஹரிஷ் குமார், ராமலிங்கம் ரோகித், ராகில் ஷா, எம் சிலம்பரசன், ராக்கி பாஸ்கர், லோகேஷ் ராஜ்

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் – சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் பவுலிங்!

இதில், தொடக்க வீரர்கள் ராகுல் 20 ரன்னிலும், சிவம் சிங் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பாபா இந்திரஜித், பூபதி குமார் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அஸ்வின் 6 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆதித்யா கணேஷ் மற்றும் சி சரத் குமார் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். ஆதித்யா கணேஷ் 30 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

13 சிக்ஸர், 3 பவுண்டரி, 4 விக்கெட், புனேரி அணியை விரட்டி விரட்டி அடித்த 18 வயது வீரர் அர்சின் குல்கர்னி!

சரத் குமார் 21 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து வந்த சுபோத் பதி 13 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி தத்தளித்த போது, ஆதித்யா கணேஷ் மற்றும் சரத் குமார் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்டர்னர்ஷிப் சேர்த்தனர். இறுதியாக திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios