13 சிக்ஸர், 3 பவுண்டரி, 4 விக்கெட், புனேரி அணியை விரட்டி விரட்டி அடித்த 18 வயது வீரர் அர்சின் குல்கர்னி!
எம்பிஎல் தொடரின் ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் அணி வீரர் அர்சின் குல்கர்னி 54 பந்துகளில் 117 ரன்கள் அடித்து அதிவேக சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு மாநிலத்திலும் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. தம்ழிநாட்டில் டிஎன்பிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடர் எனப்படும் எம்பிஎல் தொடர் நடக்கிறது. இதில், ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் அணியின் வீரர் 18 வயது நிரம்பிய அர்சின் குல்கர்னி, புனேரி பாப்பா அணிக்கு எதிராக 54 பந்துகளில் 117 ரன்கள் அடித்து அதிவேக சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கு சுப்மன் கில்லிற்கு அதிக வாய்ப்புகள் உண்டு – பூபிந்தர் சிங்!
கடந்த 19 ஆம் தேதி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான புனேரி பாப்பா அணிக்கும், ராகுல் திரிபாதி தலைமையிலான ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் அணிக்கும் இடையிலான 7ஆவது எம்பிஎல் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற புனேரி பாப்பா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்துள்ளது. இதில், அர்சின் குல்கர்னி 54 பந்துகளில் 13 சிக்சர்கள், 3 பவுண்டரி உள்பட 117 ரன்கள் குவித்து அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா படைத்த சாதனைகளின் பட்டியல்!
இதில், குல்கர்னி 16 பந்துகளில் 90 ரன்கள் எடுத்துள்ளார். அதிலேயும் 13 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 90 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங்கில் தான் இப்படி அடித்திருக்கிறார் என்று பார்த்தால் பவுலிங்கிலும், தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் உள்பட 4 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஒரு ரன் கூடுதலாக அடித்து சேவாக் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!
புனேரி பாப்பா அணி 204 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடியது. இதில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் யாஷ் ஷிர்சாகர் 47 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி பந்தில் புனேரி பாப்பா அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவப்பட்ட நிலையில், கடைசி ஓவரை அர்சின் குல்கர்னி வீசினார்.
இதில், 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலமாக ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தனது திறமையை வெளிப்படுத்திய ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் அணியின் வீரர் அர்சின் குல்கர்னி விரைவில் இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.