டிக்ளேர் செய்ததில் துளி கூட கவலையில்லை; நெக்ஸ் போட்டியில் இதை விட அதிரடியாக ஆடுவோம்: பென் ஸ்டோக்ஸ்!
ஆஸ்திரேலியா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு டிக்ளேர் செய்தது குறித்து துளியும் கவலையில்லை என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய இங்கிலாந்து 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 7 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஹாட்ரிக் வெற்றியை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் – சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் பவுலிங்!
பின்னர், 280 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு 2ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியிருப்பதாவது:
போட்டியின் கடைசி வரை அனைத்து வகையான உணர்வுகளிலும் தான் இருந்தோம். எங்களது டீமை நினைத்து பெருமையாக கருதுகிறேன். போட்டியின் போது ரசிகர்கள் அனைவருமே இருக்கையில் நுனிக்கே வந்திருப்பார்கள். இதன் மூலமாக அடுத்து வரும் போட்டியை அதிக ஆர்வமாக பார்க்க விரும்புவார்கள்.
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கு சுப்மன் கில்லிற்கு அதிக வாய்ப்புகள் உண்டு – பூபிந்தர் சிங்!
எங்களது தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், இந்தப் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டோம் என்பதற்காக எங்களது அணுகுமுரையை நாங்கள் மாற்றப் போவதில்லை. பேஸ்பால் அணுகுமுறையைத் தான் தொடருவோம். இதைவிட அடுத்த போட்டியில் எங்களது ஆட்டம் சிறப்பாக இருக்கும். எங்களது எது சரி என்று தோன்றுகிறதோ அதைத் தான் தைரியமாக எடுப்போம். முதல் நாளிலேயே டிக்ளேர் செய்ததில் துளி கூட கவலையில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 விக்கெட்டுகள் வீழ்த்தியது சிறந்த வாய்ப்பாக அமைந்தது. கடைசி 20 நிமிடங்களில் பேட்டிங் ஆடுவது கஷ்டமான ஒன்று. டிக்ளேர் செய்யாமல் இருந்திருந்தால் ரூட் மற்றும் ஆண்டர்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து, ஆல் அவுட்டாகவும் வாய்ப்புகள் இருக்கிறது. நேற்றைய போட்டியிலும் ஜோட் ரூட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது முதல் அரைமணி நேர ஆட்டம் எங்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் ரசிக்க வைத்தது. ஆனால், கடைசி நேரத்தில் வெற்றி பெற்ற ஆஸி, அணியை பாராட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.