ஹாட்ரிக் வெற்றியை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் – சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் பவுலிங்!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் 11ஆவது போட்டி இன்று நடக்கிறது. இதில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றா. இதில், டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் விளையாட இருக்கிறது.
இதுவரையில் நடந்த 2 போட்டிகளில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 19 ஆம் தேதி லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கு சுப்மன் கில்லிற்கு அதிக வாய்ப்புகள் உண்டு – பூபிந்தர் சிங்!
சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் டிராகன்ஸ்:
ஷிவன் சிங், எஸ் அருண், பாபா இந்திரஜித், சி சரத் குமார், சுபோத் பதி, ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), பூபதி குமார், எம் மதிவாணன், பி சரவண குமார், ஆதித்யா கணேஷ், ராகுல்.
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்:
என் ஜெகதீசன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சந்தோஷ் ஷிவ், பாபா அபாரஜித், சஞ்சய் யாதவ், உதிரசாமி சசிதேவ், எஸ் ஹரிஷ் குமார், ராமலிங்கம் ரோகித், ராகில் ஷா, எம் சிலம்பரசன், ராக்கி பாஸ்கர், லோகேஷ் ராஜ்