ரூ.2000 கோடி மதிப்பிலான ட்ரோன் நிறுவனத்தை நடத்தி வரும் தோனியின் பிஸினஸ் பார்ட்னர்!
சர்வதேச நீச்சல் வீரரும், தோனியின் பிஸினஸ் பார்ட்னருமான அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் ரூ.2000 கோடி மதிப்பிலான ட்ரோன் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தவிர, பிஸினஸ் முதலீடுகள், ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி, விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலமாக வருடத்திற்கு ரூ.1040 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி வருகிறார். அப்படிப்பட்ட நிறுவனங்களில் தோனியின் பிஸினஸ் பார்டனரான அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் ரூ.2000 கோடி மதிப்பிலான ட்ரோன் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!
அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் இந்தியாவின் முன்னணி ட்ரோன் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. இந்நிறுவனம் பாதுகாப்பு மற்றும் உணவு விநியோக சேவைகளை வழங்குகிறது. இது தவிர ஜெயபிரகாஷ், தோனியின் முக்கிய பிஸினஸ் ஒன்றின் பங்குதாரராகவும் உள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு தோனி எப்படி இருக்கிறார்? எப்போது விளையாடுவார்? சிஎஸ்கே சிஇஓ ஓபன் டாக்!
சர்வதேச அளவிலான நீச்சல் வீரரும், தொழில்முனைவோருமான அக்னிஷ்வர் ஜெயபிரகாஷால் நடத்தப்படும் கருடா ஏரோஸ்பேஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தில், எம்எஸ் தோனி மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவர். கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்து, இந்நிறுவனத்தை அடுத்து கட்டத்திற்கு கொண்டு செல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
ஆதித்யா கணேஷ், சுபோத் பதி அதிரடியால் திண்டுக்கல் டிராகன்ஸ் 170 ரன்கள் குவிப்பு!
தோனியின் பிஸினஸ் பங்குதாரரான அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் யார்?
அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் ஒரு சர்வதேச அளவிலான நீச்சல் வீரர். அவர் உலக சாம்பியன்ஷிப் மற்றும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பலமுறை நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். அவர் ஒலிம்பிக்கிற்கான ஒரு தெளிவான வாய்ப்பாக இருந்தார், ஆனால் வேறு வழியில் நாட்டுக்கு சேவை செய்ய முடிவு செய்தார்.
டிக்ளேர் செய்ததில் துளி கூட கவலையில்லை; நெக்ஸ் போட்டியில் இதை விட அதிரடியாக ஆடுவோம்: பென் ஸ்டோக்ஸ்!
ஜெயபிரகாஷ் புகழ்பெற்ற ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்றவர் மற்றும் ஐ.நா.வின் உதவி பொதுச் செயலாளர் லக்ஷ்மி பூரியின் கீழ் பணிபுரிந்தார். அப்போதுதான் அவர் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களைப் பற்றி அறிந்து ட்ரோன் நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்தார். அதன் பிறகு கருடா ஏரோஸ்பேஸ் என்ற ட்ரோன் நிறுவனத்தை தொடங்கினார்.
ஸ்விக்கி, பிளிப்கார்ட், டெலிவெரி ஆகிய நிறுவனங்களுடன் பார்டனராகவும் உள்ளார். தோனியின் சிறிய அளவிலான முதலீட்டிற்குப் பிறகு இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராகவும் தோனி இருக்கிறார். பல ஊடகங்களின் அறிக்கையின்படி இந்த நிறுவனம் ரூ.165 கோடி முதலீட்டை எதிர்பார்ப்பதோடு, தற்போது வணிகத்தின் படி இந்த நிறுவனம் ரூ.2051 கோடிக்கு நிகர லாபம் ஈட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாட்ரிக் வெற்றியை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் – சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் பவுலிங்!