ஐபிஎல் 16வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸூக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

ஐபிஎல் 16வது சீசன் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்று, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது.

இன்று சனிக்கிழமை 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயித்த 192 ரன்கள் என்ற இலக்கை கேகேஆர் அணி விரட்டிவருகிறது.

IPL 2023: இந்த சீசனில் நான் ரொம்ப எதிர்பார்க்குற பிளேயர் அவர்தான்! வேற லெவல் சம்பவம் வெயிட்டிங் - ஹர்பஜன் சிங்

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன. லக்னோவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரைலீ ரூசோ, சர்ஃபராஸ் கான் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், சேத்தன் சக்காரியா, கலீல் அகமது, முகேஷ் குமார்.

IPL 2023:தோனி இந்த மாதிரி தப்புலாம் செய்யலாமா? தோனியின் மோசமான கேப்டன்சி தான் தோல்விக்கு காரணம்! சேவாக் அதிரடி

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் பதோனி, மார்க் உட், ஜெய்தேவ் உனாத்கத், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.