Asianet News TamilAsianet News Tamil

IPL 2022: விராட் கோலி அவ்வளவுதான்.. இனிமேல் சான்ஸே இல்ல..! முன்னாள் ஆர்சிபி கேப்டன் அதிரடி

விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக இனிமேல் செயல்பட வாய்ப்பே இல்லை என்று ஆர்சிபி முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
 

daniel vettori opines virat kohli will never lead rcb again
Author
Bangalore, First Published Mar 7, 2022, 8:24 PM IST

விராட் கோலி மீது விமர்சனம்:

ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. கடந்த ஐபிஎல் சீசன் முடிந்ததுமே, ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட் கோலி. 2013ம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட்கோலி, ஒருமுறை கூட ஐபிஎல் டைட்டிலை ஜெயிக்கவில்லை.  அதுவே அவர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி பெரிய ஸ்கோர் எதுவும் செய்யாத நிலையில், பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக இந்திய அணியின் கேப்டன்சி, ஆர்சிபி கேப்டன்சி என அவர் வகித்த அனைத்து கேப்டன்சியிலிருந்தும் விலகினார்.

இதையும் படிங்க - ஜடேஜா பெருந்தன்மையான மனசுக்காரர்.. அவரோட பவுலிங் கோட்டாவை விட்டுக்கொடுத்தார்..! அஷ்வின் புகழாரம்

ஆர்சிபியின் புதிய கேப்டன்:

ஐபிஎல் 15வது சீசனிலிருந்து ஆர்சிபி அணியில் விராட் கோலி ஒரு சாதாரண வீரராக ஆடவுள்ளார். எனவே ஐபிஎல் 15வது சீசனில் புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆர்சிபி அணி, ஏலத்தில் டுப்ளெசிஸ், தினேஷ் கார்த்திக் ஆகிய கேப்டன்சிக்கான வீரர்களை எடுத்தது. ஆனால் இவர்களை விட, ஆர்சிபி அணி ஏலத்திற்கு முன் தக்கவைத்த க்ளென் மேக்ஸ்வெல்லை கேப்டனாக நியமிப்பதற்கான வாய்ப்புதான் அதிகம் உள்ளது.

தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பில்லை. மேக்ஸ்வெல் மற்றும் டுப்ளெசிஸ் ஆகிய இருவரில் ஒருவர் தான் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே, விராட்கோலியையே மீண்டும் கேப்டன்சியை ஏற்குமாறு ஆர்சிபி அணி நிர்வாகம் பேசியதாகவும் தகவல் வெளியாகியது.

இதையும் படிங்க - கடைசிவரை ஷேன் வார்னிடம் நான் இதை சொல்லலயே.. இப்ப சொல்லணும்னு நெனக்கிறேன்; அவர் இல்லையே! கலங்கிய பாண்டிங்

ஆனால், விராட் கோலி இனிமேல் ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பேயில்லை என்று முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

டேனியல் வெட்டோரி கருத்து:

இதுகுறித்து பேசிய டேனியல் வெட்டோரி, விராட் கோலி இனிமேல் ஆர்சிபி அணிக்கு கேப்டன்சி செய்ய வாய்ப்பே இல்லை. சர்வதேச கிரிக்கெட்டோ அல்லது ஐபிஎல்லோ, கேப்டன்சியிலிருந்து விலகிய ஒரு வீரர் மீண்டும் கேப்டன்சியை ஏற்காமல் இருப்பதே நல்லது. எனவே மேக்ஸ்வெல் - டுப்ளெசிஸ் ஆகிய இருவரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம். தினேஷ் கார்த்திக்கிற்கு கூட வாய்ப்புள்ளது என்றார் வெட்டோரி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios