சிஎஸ்கே வெற்றி பெறவே பெய்த மழை – வருண பகவானின் கருணையோ கருணை!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி 16ஆவது ஐபிஎல் சீசனுக்கான முதல் போட்டி தொடங்கியது. இதில், சென்னை மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதே போன்று ஐபிஎல் இறுதிப் போட்டிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் வந்தன.
நெஹ்ரா தான் குஜராத் டைட்டன்ஸ் தோல்விக்கு காரணமா? – டுவிட்டரில் தாறுமாறாக வந்த விமர்சனம்!
கடந்த 28 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்க இருந்தது. ஆனால் அன்றைய போட்டியில் மழை பெய்து போட்டி நடக்கவிடாமல் செய்தது. இதனால் மறுநாளைக்கு போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.
5 ஆவது முறையாக சென்னை சாம்பியன்: டிராபியை பெற்றுக் கொள்ள ராயுடு, ஜடேஜாவை அழைத்த தோனி!
அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நடந்தது. நேற்று முன்தினம் போன்று தொடர்ந்து மழை பெய்தால் குஜராத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும். அப்படி நடக்கவில்லை. குஜராத் ஆடிய பிறகு சென்னை அணி விளையாடும் போது மழை குறுக்கிட்டது. மழை வந்து கொஞ்ச நேரத்திலேயே நின்றிருந்தால் கூட 20 ஓவர்களும் வீசப்பட்டிருக்கும். அப்படியும் நடக்கவில்லை. ஆனால், போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எனக்கு ஈஸியானது நன்றி சொல்றது, கஷ்டமானது அடுத்த சீசனுக்காக 9 மாசம் கடினமாக உழைக்கனும் – தோனி!
இதன் காரணமாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் தொடக்க முதலே அதிரடி காட்டினர். கெய்க்வாட் 26, கான்வே 47, ரஹானே 27, ராயுடு 19, தோனி 0 என்று ஒவ்வொருவரும் ரன்கள் சேர்த்தனர். கடைசியாக வந்த ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்துக் கொடுக்கவே சிஎஸ்கேயின் கனவு நிறைவேறியது. இறுதியாக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5ஆவது முறையாக ஐபிஎல் டிராபியை கைப்பற்றியது.
ஐபிஎல் 2023 பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? மும்பைக்கு ரூ.7 கோடி, லக்னோவிற்கு ரூ.6.5 கோடி!
ஆனால், இந்த 2 நாட்களிலும் மழை பெய்யாமல் இருந்தாலும் போட்டியின் நிலை மாறியிருக்க கூடும். அதே போன்று, நேற்று முழுவதும் மழை பெய்திருந்தால் போட்டியின் நிலை மாறியிருக்க கூடும். ஒருவேளை நேற்றைய போட்டியில் மழை பெய்யாமல் இருந்திருந்தால் சென்னை 215 ரன்கள் எடுத்திருக்குமா என்பது சந்தேகம் தான். வரலாற்றில் முதல் முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டி மழையின் காரணமாக 28, 29, 30 என்று 3 நாட்கள் வரை சென்றுள்ளது.