குஜராத்துக்கு எதிராக இதுவரையில் ஒன்னுல கூட ஜெயிக்காத சென்னை: பிளே ஆஃபில் வரலாற்றை மாற்றியமைக்குமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த 3 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நிறைவு பெறும் நேரம் வந்துவிட்டது. பதினாறாவது சீசனுக்காக ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பரபரப்பாக சென்ற நிலையில் தற்போது இன்னும் 3 போட்டிகளுடன் முடிவுக்கு வர இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
நாளை காலை 4.30 மணிக்கு இங்கிலாந்து செல்லும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி!
இதில் முதல் பிளே ஆஃப் சுற்று போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரையில் நடந்த போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகளில் 3 போட்டியிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றி பெற்றிருக்கிறது.
ஒரு போட்டியில் மட்டும் ஜெயிச்சிட்டால் திரும்ப வந்திருவோம் – உண்மையான ரோகித் சர்மாவின் வாக்கு!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் முதல் முறையாக விளையாடுகிறது. இந்த மைதானத்தில் இதுவரையில் 74 போட்டிகள் நடந்துள்ளது. இதில், முதலில் ஆடிய அணி 44 போட்டிகளிலும், 2ஆவதாக ஆடிய அணி 30 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
IPL 2023: மிடில் ஆர்டர் சரியில்லை; ஒரு போட்டியில் ஜெயித்தால் மீண்டு வருவோம்: ரோகித் சர்மா!
சிஎஸ்கே விளையாடிய 63 போட்டிகளில் 44ல் வெற்றியும், 18ல் தோல்வியும் அடைந்துள்ளது. இதில், முதலில் பேட்டிங் ஆடி 27 போட்டிகளிலும், 2ஆவது பேட்டிங் ஆடி 17 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 246 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக 109 ரன்கள் எடுத்துள்ளது என்படு குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி தோல்விக்கு யார் காரணம்? ஃபாப் டூப்ளெசிஸ் ஓபன் டாக்!
இந்த சீசனில் இரு அணிகளுக்கும் இடையில் நடந்த முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடக்கவுள்ள முதல் பிளே ஆஃப் போட்டியில் தோனியின் கேப்டன்ஷியில் கீழ் விளையாடும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.