சீட் பெல்ட் அணிந்து 1973 ஆம் ஆண்டுகளில் வந்த காரை ஓட்டிச் சென்ற தோனி: வைரலாகும் வீடியோ!
ராஞ்சியில் சீட் பெல்ட் அணிந்து கொண்டு போண்டியாக் டிரான்ஸ் ஆம் எஸ்டி-455 என்ற மாடல் காரை ஓட்டிச் செல்லும் தோனியின் வீடியோ ஒன்று இப்போது வைரலாகிறது.
கிரிக்கெட் தவிர தோனிக்கு கார் மற்றும் பைக் என்றால் அவ்வளவு பிரியம். ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் கார் மற்றும் பைக் நிறுத்துவதற்கு என்றே தனியாக கேரேஜ் வைத்திருக்கிறார். அந்தளவிற்கு பைக் மற்றும் கார்களை நிறுத்தி வைத்திருக்கிறார். அண்மையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தோனி வீட்டிற்கு சென்றிருந்த போது பைக் மற்றும் கார்கள் கொண்ட வீடியோவை பதிவிட்டிருந்தார்.
ஐபிஎல் 2024 தொடருக்கு தயாராகி வரும் எம்.எஸ்.தோனி: ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி!
கடந்த சில தினங்களாகவே தோனி தொடர்பாக செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது. அண்மையில் தோனி ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்துவிட்டு நடந்த வந்த வீடியோ வெளியானது. அதன் பிறகு விமானத்தில் தோனி தூங்கிக் கொண்டே சென்ற வீடியோ ஒன்று வைரலானது. சமீபத்தில் கூட தோனி விண்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஓட்டிச் சென்ற வீடியோ வைரலாகியிருந்தது.
ராஞ்சியில் விண்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வேகமாக செல்லும் எம்எஸ் தோனி: வைரலாகும் வீடியோ!
இந்த நிலையில், தற்போது ராஞ்சியில் 1973 ஆம் ஆண்டு வந்த போண்டியாக் டிரான்ஸ் ஆம் எஸ்டி- 455 என்ற மாடல் காரை ஓட்டிச் செல்கிறார். அதுவும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி அவர் காட்டி ஓட்டிச் செல்லும் அழகே தனி தான். கார் ஓட்டிச் செல்லும் போது சீட் பெல்ட் அணிந்து செல்கிறார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விமானத்தில் தூங்கியபடி வரும் தோனியை வீடியோ எடுத்த விமான பணிப்பெண்: வைரலாகும் வீடியோ!