Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் 2024 தொடருக்கு தயாராகி வரும் எம்.எஸ்.தோனி: ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி!

தீவிரமாக உடற்பயிற்சி செய்து விட்டு ஜிம்மிலிருந்து வெளியில் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MS Dhoni preparing for IPL 2024 series: intense exercise in the gym!
Author
First Published Jul 26, 2023, 2:05 PM IST

ஐபிஎல் 2023 தொடரின் 16ஆவது சீசன் கடந்த மே மாதம் முடிந்தது. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5ஆவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியனானது. இந்த தொடரில் தோனி முழங்கால் வலியால் தொடர்ந்து விளையாடி வந்தார். தொடர் முடிந்த பிறகு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ஹோம் சீசனில் புறக்கணிக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம்!

அதன் பிறகு ஓய்விற்காக ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கு ஓய்வில் இருந்து வந்தார். தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக எல்ஜிஎம் படத்தை தயாரித்துள்ளார் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தோனி, தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அப்போது, யோகி பாபு குறித்து பேசினார். சென்னை அணியில் அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்ற நிலையில் அவரது இடத்திற்கு யோகி பாபு சரியாக இருப்பார். ஆனால், அவரது கால்ஷீட் குறித்து கிண்டல் செய்தார்.

2024 மார்ச் வரையில் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடும் இந்திய அணி: ஹோம் சீரிஸ் அட்டவணை வெளியீடு!

யோகி பாபுவிற்கு கால்ஷீட் கிடைக்கவில்லை. எனினும், அணி நிர்வாகம் உங்களை தொடர்பு கொள்ளலாம். ஆனால், பந்து வீச்சாளர்கள் வேகமாக பந்து வீசலாம். ஆதலால், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு கூறினார். இதையடுத்து, யோகி பாபு தீவிரமாக பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

முதலமைச்சர் கோப்பை நிறைவு விழா – 61 தங்கம் வென்று சென்னை மாவட்ட அணி முதலிடம்: டிராபி வழங்கிய முதல்வர்!

இந்த நிலையில், தான் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனியும் தனது அடுத்த சீசனுக்காக ரெடியாகி வருகிறார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நவராத்திரி விழா: இந்தியா – பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றப்படுமா?

ஜிம்மில் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வெளியில் வரும் தோனியின் வீடியோ தான் வைரலாகி வருகிறது. வரும் 2024 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது தான் தோனி இந்த சீசனில் விளையாடுவாரா இல்லை உடல்நிலை காரணமாக ஓய்வை அறிவிப்பாரா இல்லை சென்னை அணியின் கேப்டன்ஷிப் மாற்றப்படுமா என்பது குறித்தெல்லாம் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்த சிராக் ஷெட்டி - சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios