நவராத்திரி விழா: இந்தியா – பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றப்படுமா?
வரும் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்க உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தேதி மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து, ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா முழுவதும் 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடக்கிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. ஆனால், அக்டோபர் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 24 ஆம் தேதி வரையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. பொதுவாக இந்திய அணி விளையாடும் போட்டி என்றாலே ரசிகர்களின் வருகை அதிகமாக இருக்கும். அப்படியிருக்கும் போது இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் மினி ஏல தொகையில் மாற்றம் கொண்டு வரும் பிசிசிஐ: கொண்டாட்டத்தில் சிஎஸ்கே!
இதனால், அளவுக்கு அதிகமாகவே ரசிகர்களின் வருகை இருக்கும். மேலும், நவராத்திரி விழா வேறு. ஆதலால், கண்டிப்பாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 15 ஆம் தேதிக்கான போட்டி மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமின்றி போட்டிகளை நடத்தும் 10 மைதானங்களில் ஏதேனும் சிக்கல், பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து விவாதிக்க வரும் 27 ஆம் தேதி நாளை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆலோசனை நடத்த உள்ளார். இது தான் உலகக் கோப்பை தொடருக்கான கடைசி மீட்டிங்காக இருக்கும் என்று கூறப்படுகிறது.