உலக பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்த சிராக் ஷெட்டி - சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி!
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில், ஆடவர் இரட்டையர் பிரிவில் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோர் தரவரிசைப் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளனர்.
தென் கொரியாவில் யோசுவில் உள்ள ஜின்னம் ஸ்டேடியத்தில் கடந்த 18ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் பேட்மிண்டன் போட்டி நடந்தது. இதில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி சாம்பியனானது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரணாய், ஹாங்காங் லீ செயுக் யியூயை எதிர்கொண்டார். இதில், பிரணாய் தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்து வெளியேறினார்.
ரூ.43 ஆயிரம் சம்பளத்திற்கு தோனிக்கு வந்த வேலை வாய்ப்பு? எந்த கம்பெனி தெரியுமா?
இதே போன்று, மகளிர் ஒற்றையர் பிரிவுன் போட்டீயில் இந்தியாவின் தஸ்னிம் மிர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு போட்டியில் 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிவி சிந்து முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார்.
இந்த நிலையில், உலக பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி இரட்டையர் பிரிவில் நம்பர் 2 இடம் பிடித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஜோடி நம்பர் 5 இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.