ராஞ்சியில் விண்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வேகமாக செல்லும் எம்எஸ் தோனி: வைரலாகும் வீடியோ!
ராஞ்சியில் விண்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் காரில் தோனி வேகமாக செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் எம்.எஸ்.தோனி. டி20 உலகக் கோப்பை, ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என்று கைப்பற்றிக் கொடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு இதுவரையில் இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றவில்லை. இதே போன்று ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5ஆவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி வாங்கி கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தோனி 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் டிராபிகளை சென்னை அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார். கிரிக்கெட் மீதான தோனியின் ஆர்வம் எவ்வளவுக்கு எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவிற்கு பைக், கார்கள் மீது அதிக ஆர்வமும் கொண்டுள்ளார். ஏராளமான பைக்குகள் தனது வீட்டில் வாங்கி குவித்துள்ளார். சமீபத்தில் தோனியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார், பைக் கலெக்ஷன் தொடர்பான வீடியோ வைரலானது. கிட்டத்தட்ட 50க்கும் அதிகமான பைக்குகள், 10க்கும் அதிகமான கார்களும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் மினி ஏல தொகையில் மாற்றம் கொண்டு வரும் பிசிசிஐ: கொண்டாட்டத்தில் சிஎஸ்கே!
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சமீபத்திய வீடியோ ஒன்று அவருக்கு ஆட்டோமொபைல் மீதுள்ள காதலை காட்டுகிறது. பெரும்பாலான தோனி ரசிகர்களுக்கு பைக்குகள் மீதான அவரது காதல் பற்றி ஏற்கனவே தெரியும், அவர் கார்களிலும் ஆர்வமாக உள்ளார் மற்றும் ராஞ்சியின் தெருக்களில் விண்டேஜ் ரோல்ஸ் ராய்ஸை ஓட்டுவதைக் காண முடிந்தது. அதன் வீடியோ தான் தற்போது வைரலாகியுள்ளது.