Asianet News TamilAsianet News Tamil

விமானத்தில் தூங்கியபடி வரும் தோனியை வீடியோ எடுத்த விமான பணிப்பெண்: வைரலாகும் வீடியோ!

விமானத்தில் தூங்கியபடி வரும் தோனியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

MS Dhoni Sleeping during travelled in flight and air hostess take a video
Author
First Published Jul 30, 2023, 1:58 PM IST | Last Updated Jul 30, 2023, 1:58 PM IST

இந்திய அணியின் முக்கியமான கிரிக்கெட் வீரராக இருந்தவர் எம்.எஸ்.தோனி. டி20 உலகக் கோப்பை, கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை சாம்பியன்ஸ் டிராபி வாங்கி கொடுத்துள்ளார். இந்த தொடரில் தோனி முழங்கால் வலியால் தொடர்ந்து விளையாடி வந்தார். தொடர் முடிந்த பிறகு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

தோனியின் மூத்த சகோதரி ஜெயந்தி குப்தா யாரை திருமணம் செய்திருக்கிறார் தெரியுமா?

அதன் பிறகு ஓய்விற்காக ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கு ஓய்வில் இருந்து வந்தார். தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக எல்ஜிஎம் படத்தை தயாரித்துள்ளார் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தோனி, தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.

Asian Games 2023 QF, SF: காலிறுதி, அரையிறுதிக்கு இந்திய மகளிர் அணிக்கு கேப்டனான ஸ்மிருதி மந்தனா!

இதற்காக தோனி தனது மனைவி சாக்‌ஷியுடன் சென்னை வந்த வீடியோ அப்போது வெளியானது. இந்த நிலையில், தோனி அதே ஹேர்ஸ்டைல் மற்றும் அதே காஸ்ட்யூம் உடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது என்ன வீடியோ என்றால் விமானத்தில் தோனி தூங்கியபடி வருகிறார். அருகில் அவரது மனைவி சாக்‌ஷி தோனி அமர்ந்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு உத்தமராக வாழும் கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

இதனை விமானப்பணிப்பெண் வீடியோவாக தனது மொபையில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. எல்ஜிஎம் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, யோகி பாபு குறித்து பேசினார். சென்னை அணியில் அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்ற நிலையில் அவரது இடத்திற்கு யோகி பாபு சரியாக இருப்பார். ஆனால், அவரது கால்ஷீட் குறித்து கிண்டல் செய்தார். யோகி பாபுவிற்கு கால்ஷீட் கிடைக்கவில்லை.

ஸ்டெம்பை உடைத்தல், நடுவர் மீதான சர்ச்சை கருத்து: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை!

எனினும், அணி நிர்வாகம் உங்களை தொடர்பு கொள்ளலாம். ஆனால், பந்து வீச்சாளர்கள் வேகமாக பந்து வீசலாம். ஆதலால், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு கூறினார். இதையடுத்து, யோகி பாபு தீவிரமாக பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

WI vs IND: இளம் வயதில் 2500 ரன்களை கடந்து சாதனை படைத்த சுப்மன் கில்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios