திருமணத்திற்கு பிறகு உத்தமராக வாழும் கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
திருமணத்திற்கு பிறகு திருந்தி வாழும் கிரிக்கெட் பிரபலங்களில் முதலாவதாக இருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தான்.
பொதுவாக வீட்டில் படித்து முடித்துவிட்டு தருதலையாக சுற்றிக் கொண்டிருக்கும் வயது பசங்களுக்கு ஒரு கால் கட்டு போட்டாத்தான் சரியாக இருக்கும். அதன் பிறகு தான் உருப்படுவார் என்று கூறி திருமணம் செய்து வைப்பார்கள். திருமணத்திற்கு முன்பு பொறுப்பில்லாமல் இருக்கும் இளைஞர்கள் திருமணத்திற்கு பிறகு குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்போடு இருப்பார்கள்.
ஸ்டெம்பை உடைத்தல், நடுவர் மீதான சர்ச்சை கருத்து: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை!
அப்படி திருமணத்திற்கு பொறுப்பான ஆண்கள் நம் இந்திய கிரிக்கெட் அணியிலும் இருக்கிறார்கள். அவர்கள் பற்றிதான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். திருமணத்திற்கு முன்னதாக சர்ச்சைகளில் சிக்கிய வீரர்கள் திருமணத்திற்கு பிறகு சர்ச்சைகளில் சிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எம்.எஸ்.தோனி. திருமணத்திற்கு முன்னதாக காதல் வலையில் சிக்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி பல பெண்களுடன் கிசுகிசுக்களிலும் சிக்கியிருக்கிறார். அதில் இடம் பெற்றவர்கள் நடிகை அசின், ராய் லட்சுமி ஆகியோரை குறிப்பிடலாம்.
ஐபிஎல் 2024 தொடருக்கு தயாராகி வரும் எம்.எஸ்.தோனி: ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி!
ஆனால், சாக்ஷியை திருமணம் செய்து கொண்ட தோனி, அடகக்ம் ஒடக்கமாக மனைவி சொல்லே மந்திரம் என்று மாறிவிட்டார். அதுமட்டுமின்றி விவசாயம், பிஸினஸ் என்று வருடத்திற்கு ரூ.1040 கோடி வரையில் சம்பாதிக்கிறார். இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவர் விராட் கோலி. இவர் தமன்னா உள்ளிட்ட நடிகைகளுடன் வலம் வந்திருக்கிறார். அதன் பிறகு தான் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டு உத்தமராக வாழ்ந்து வருகிறார்.
ஹோம் சீசனில் புறக்கணிக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம்!
அடுத்த இடத்தில் இருப்பவர் ஹர்திக் பாண்டியா. சர்ச்சையான கருத்துக்களை பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இதனால், அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஹர்திக் பாண்டியா, நடாசா ஸ்டான்கோவிக்கை திருமணம் செய்து கொண்டு சர்ச்சையில் சிக்காமல் குடும்பம், குழந்தை என்று வாழந்து வருகிறார்.
2024 மார்ச் வரையில் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடும் இந்திய அணி: ஹோம் சீரிஸ் அட்டவணை வெளியீடு!