வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் சுப்மன் கில் 2500 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக இஷான் கிஷான் 52 ரன்கள் சேர்த்தார். சுப்மன் கில் 34 ரன்கள் எடுத்தார். இது சுப்மன் கில்லின் 26ஆவது ஒரு நாள் போட்டி ஆகும். அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50ஆவது போட்டியில் விளையாடினார். இதில், 14 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வயதில் 2500 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஓய்வு முடிவை அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்: 17 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு எண்ட்கார்டு!
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமின் சாதனையை முறியடித்துள்ளார். பாபர் அசாம், 26 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அவர் 1322 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், சுப்மன் கில் தனது 26ஆவது ஒரு நாள் போட்டியில் 34 ரன்கள் எடுத்ததன் மூலமாக 1352 ரன்கள் எடுத்து பாபர் அசாம் சாதனையை முறியடித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் வெளியேறினார். முதல் விக்கெட்டிற்கு 90 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி அடுத்து 23 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்த நிலையில், 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
விராட் கோலிக்கு பிரேஸ்லெட் பரிசாக அளித்த ரசிகை: வைரலாகும் வீடியோ!
பின்னர், எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் கேப்டன் ஷாய் ஹோப் பொறுப்பை உணர்ந்து விளையாடி 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு வீரர் கீசி கார்டி 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 1 ஆம் தேதி டிரினிடாட்டில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
