Asianet News TamilAsianet News Tamil

WI vs IND 2nd ODI: பொறுப்புடன் ஆடிய வெ.இ.கேப்டன் ஷாய் ஹோப்; இந்தியாவுக்கு பதிலடி, தொடரும் 1-1 என்று சமன்!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

West Indies Beat India in 2d ODI by 6 wickets diffrence at Bridgetown
Author
First Published Jul 30, 2023, 9:30 AM IST

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியில் இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இதில், சுப்மன் கில் பொறுப்புடன் விளையாடினார். எனினும், அவர் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

விட்டு விட்டு மழை; மீண்டும் வேலயை காட்டிய மைதானம்; இந்தியா 181க்கு ஆல் அவுட்!

ஒரு புறம் நிதானமாக ஆடிய இஷான் கிஷான் 55 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 55 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்‌ஷர் படேல் 1 ரன்களில் வெளியேறினார்.

கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போது, மழை குறுக்கீடு இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு மழை விடவும் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. எனினும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.

பொறுப்பாக ஆடிய சுப்மன் கில், இஷான் கிஷான் அரைசதம்: மழையால் போட்டி பாதிப்பு!

அதன் பிறகு, பொறுப்பாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே சூர்யகுமார் யாதவ்வும் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.  பிறகு வந்த ஷர்துல் தாக்கூர்16 ரன்களில் ஆட்டமிழக்க, உம்ரான் மாலிக் வந்தார். அப்போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கீடு ஏற்பட்டது. அதன் பிறகு சிறிது நேரத்திலேயே மழை நின்று போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.

WI vs IND 2nd ODI: ரோகித், கோலிக்கு ஓய்வு, சாம்சன், அக்‌ஷருக்கு வாய்ப்பு: வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்!

உம்ரான் மாலிக் டக் அவுட்டில் வெளியேற, முகேஷ் குமார் களமிறங்கினார். அவர், ஒரு பவுண்டரி உள்பட 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, குல்தீப் யாதவ் 8 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்திய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் நல்ல தொடக்கம் கொடுத்தார். தொடக்கம் முதலே பவுண்டரி பவுண்டரியாக அடித்த மேயர்ஸ் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 36 ரன்கள் எடுத்தார்.

சஞ்சு சாம்சன், ஜெயதேவ் உனத்கட், அக்‌ஷர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

அடுத்து பிராண்டன் கிங் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அலிக் அதானாஸ் 6 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஷாய் ஹோப் நிதானமாக பொறுப்பை உணர்ந்து ஆடினார். அவரும், கீசி கார்டியும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஹோப் 63 ரன்னும், கார்டி 58 ரன்னும் எடுக்கவே, வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

WI vs IND: மழையால் போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு: போட்டி நடக்குமா? நடக்காதா? என்ன சொல்கிறது வானிலை ரிப்போர்ட்?

Follow Us:
Download App:
  • android
  • ios